நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான உறவானது அத்தனை நெருக்கமானது. அதனால் தான் எஜமானர்கள் இறந்த பின்னும் அவர்களின் கல்லறைகளை விட்டு செல்லாத நாய்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். என்னவோ மனிதனுக்கு அதீத நெருக்கம் நாய் என்ற இனத்தோடு உண்டு. அதனாலேயே நாய்களுக்கு ஏதாவது என்றால் துடித்து விடுகிறோம். நாய்களுக்கு ஒரு பிரசசனை என்றால் துணிவுடன் காப்பாற்றுகின்றனர். அப்படி ஒரு விடியோதான் தற்போது வெளியாகி வைரல் ஆகியுள்ளது.






வைரலான இந்த வீடியோவில் ஒரு கடுமையான காட்டாற்று வெள்ளம் ஒன்று ஓடிக்கொண்டிருக்க அதில் ஒரு ஜேசிபி நின்றுகொண்டிருக்கிறது. அந்த ஜேசிபியை பிடித்துக்கொண்டு ஒரு ஊர்காவல் படையை சேர்ந்த காக்கி உடை அணிந்த ஒருவர் நிற்கிறார். அவர் அந்த வெள்ளதுக்கு பயந்து மறு கரையில் இருக்கும் ஒரு நாயை காப்பாற்ற வெகு நேரம் முயற்சிக்கிறார். ஆனால் நாய் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. அவர் எதற்காக வருகிறார் என்று தெரியாத நாய் பின்னாலேயே அவரிடம் சிக்காமல் நின்றுகொண்டிருக்கிறது. பின்னர் வெகு நேரம் கழித்து அவரை நம்புகிறது அந்த நாய். அவரிடம் கையை கொடுத்து வெளியே வருகிறது. அப்படியே தூக்கி ஜேசிபியின் முன் பக்கெட் மீது வைக்கிறார். அப்படியே இருவரும் சேர்ந்து வெளியே வருகின்றனர்.






தெலங்கானா பகுதியில் நடந்த இந்த துணிச்சலான செயலை செய்த ஊர்காவல்படை போலீஸ்காரர் பெயர் முஜீப் என்று தெரியவந்துள்ளது. இந்த வீடியோவை முஜீபை பாராட்டி ஐபிஎஸ் அதிகாரி திபான்ஷூ காப்ரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். "சீறிப்பாய்ந்த அலையில் நாய் மாட்டிக்கொண்டதைக் கண்டு, @TelanganaCOPs இன் ஊர்காவல்படையை சேர்ந்த முஜீப் உடனடியாக ஜேசிபியை வரவழைத்து, அவரைக் காப்பாற்ற அலைகளில் இறங்கினார். துணிச்சலுடன் இறங்க முடிவு செய்த அவரின் மனதிற்கு என் மனமார்ந்த வணக்கம். காக்கி அணிந்த ஒருவர், மனித குலத்தின் சேவைக்காக எந்த ஆபத்தையும் எடுக்கத் தயங்கமாட்டார்" என்று கப்ரா வீடியோவுக்கு தலைப்பிட்டுள்ளார். இந்த விடியோ ட்விட்டரில் எட்டாயிரம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. 800க்கும் மேற்பட்ட லைக்குகளும், ரீட்வீட்டுகளும் வந்துள்ளன. இந்த வீடியோவில் அந்த ஊர்காவல் படை பொலிசாரின் துணிச்சலை பலரும் கமெண்டுகளில் பாராட்டி வருகின்றனர்.