தமிழ்நாடு:



  • தமிழ்நாடு அரசு சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக புதிய அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள் செயல்பட அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • பிப்ரவரி 1 முதல், பல்கலைக்கழகங்கள் மற்றும் அனைத்து கல்லூரிகள் செயல்பட அனுமதி

  • கல்லூரிகள் திறந்தாலும், ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு

  • இன்று முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து. வரும் ஞாயிறு (ஜனவரி 30) முழு ஊரடங்கு ரத்து

  • அனைத்து நாட்களிலும் கோவில் வழிபாடுகளுக்கு அனுமதி

  • ஓட்டல், பேக்கரிகள், உணவு விடுதிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிப்பு. பிப்ரவரி 15-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

  • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பமாகிறது


இந்தியா :



  • நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டாடா குழுமத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது

  • பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளாரை அறிவிக்க தயார் என ராகுல் காந்தி அறிவிப்பு

  • கோவிட்ஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள் கடைகளில் விற்பனைக்கு வருகிறது. நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு


உலகம் :



  • உக்ரைன் – ரஷ்ய மோதல் விவகாரம் : உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவினால் பொருளாதார தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்


விளையாட்டு :



  • ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த எந்த வீரர்களை வாங்கலாம் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள சென்னை வந்தடைந்தார் தோனி

  • ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி போட்டிகள் இன்று நடைபெற உள்ளது. முன்னணி வீரர்கள், பெரிட்டினி - நடால் ஆகியோர் ஒரு போட்டியிலும், சிட்சிபாஸ் - மெட்வெடேவ் இன்னொரு போட்டியிலும் மோதுகின்றனர்

  • 1964 ஒலிம்பிக் தொடர் ஹாக்கி விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியை வழிநடத்திய கேப்டன் சரன் ஜித் சிங், உடல்நல பாதிப்பால் 91 வயதில் நேற்று மரணமடைந்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண