கர்ப்பிணிப் பெண்களுக்கு சிசேரியன் அல்லாத சுகப்பிரசவத்தை ஊக்குவிக்கும் முயற்சியை தெலங்கானா அரசு தொடங்கியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சைக்குப் பதிலாக சுகப்பிரசவங்களை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தெலுங்கானா அரசு, அங்கீகரிக்கப்பட்ட சமூக நல ஆர்வலர்கள் , மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கர்ப்பிணி பெண்களை தேர்வு செய்து அவர்களை சுகப்பிரசவ முறையில் குழந்தைகளை பெற்றெடுக்க ஊக்குவிக்கின்றன.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுகப்பிரசவத்திற்கு செலவழிப்பதையும் , தேவையற்ற சிசேரியன் செய்யும் நடைமுறையை கட்டுப்படுத்தவும் தெலுங்கான அரசு முன்னெடுப்புகளை தொடங்கியுள்ளது.கோல்கொண்டா பகுதி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் லட்சுமி கூறும்போது, “கோல்கொண்டாவில் உள்ள ஒரு பகுதியில் அரசு விதிப்படி சுய பிரசவங்களை ஊக்குவிக்கிறோம். எங்கள் மருத்துவமனையில் சராசரியாக 8 சுகப்பிரசவங்கள் நடக்கின்றன. பிரசவத்திற்குப் பிறகு, தாய்மார்களுக்கு கேசிஆர் கருவிகள் வழங்கப்படுகின்றன. இதனால் பெண்கள் மிகவும் வசதியாக இருக்கிறார்கள், மேலும் குழந்தை பிறந்த இரண்டாவது நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.” என தெரிவித்தார்.
2017-18 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான கே.சி.ஆர் கிட் திட்டம் மாநில அரசால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..மாநில அரசின் கூற்றுப்படி, அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும் பெண்கள் அதிகபட்சமாக இரண்டு பிரசவங்களுக்கு இத்திட்டத்தைப் பயன்படுத்தலாம்.இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கர்ப்பிணிப் பெண்களுக்கும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் தேவையான அனைத்துப் பொருட்களையும் வழங்குவதாகும்.
இத்திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களுக்கு மூன்று கட்டங்களாக 12,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். பெண் குழந்தை பிறந்தால் கூடுதலாக 1000 ரூபாய் அரசால் வழங்கப்படும்.கேசிஆர் கிட்டில் பேபி ஆயில், தாய்க்கும் குழந்தைக்கும் பயன்படும் சோப்புகள், கொசுவலை, ஆடைகள், கைப்பை, குழந்தைகளுக்கான பொம்மைகள், டயாப்பர்கள், பவுடர், ஷாம்பு, புடவைகள், துண்டு மற்றும் நாப்கின்கள் மற்றும் பேபி பெட் ஆகியவற்றை அரசு வழங்குகிறது.டாக்டர் சௌஜன்யா துணை சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மகப்பேறு மருத்துவர் கூறுகையில், "தினமும் நாங்கள் கர்ப்பிணிப் பெண்களைப் பார்க்கிறோம்சுகப்பிரசவத்திற்குச் செல்லவும், சுய பிரசவத்திற்காக கடைசி நிமிடம் வரை காத்திருக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு சுய பிரசவங்கள நடக்கின்றன.
திருமலாமா என்னும் பெண் , தனக்கு அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவம் நடந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். மேலும் பேசிய அவர்“அனைத்து டாக்டர்களும் தன்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். எந்த பிரச்சனையும் இல்லை, மாத்திரைகளும் கொடுக்கப்பட்டன. குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கிறது. முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு நன்றி ” என தெரிவித்திருந்தார்.