இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமாக இருப்பது ஏபிபி நெட்வொர்க். ஏபிபி குழுமத்தின் தமிழ் செய்தி தளமான ஏபிபி நாடு இன்று மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 


மாநிலம் கடந்து நாடு கடந்து உலகம் முழுவதிலும் உள்ள அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகளைக் கண்டறிந்து, சரியான நேரத்தில் முக்கிய கட்டுரைகளாக, செய்திகளாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதை கடமையாக கொண்டுள்ளது ஏபிபி நாடு.


ஏபிபி நாடுவின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அதன்படி, தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், ஏபிபி நாடுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



அதில், "ஏபிபி நாடு தொலைக்காட்சி இரண்டாவது ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்கள். மிக பிரம்மாண்டமாக அவர்கள் வர வேண்டும். இன்னும், அதிகமாக ஊடக சேவை செய்ய வேண்டும். எல்லோர்க்கும் நல்ல செய்திகளை நடுநிலையுடன் மகிழ்ச்சியாக கொடுக்க வேண்டும்.


இன்னும் அதிக மக்கள் பார்த்து பயன் அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன். மறுபடியும் அவர்கள் மூன்றாம் ஆண்டு மட்டும் இன்றி இன்னும் பல ஆண்டுகள் ஊடக சேவை செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.