ஏபிபி நாடு இணைய செய்தி நிறுவனம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


3ம் ஆண்டில் ஏபிபி நாடு:


இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமாக உள்ள ஏபிபி நெட்வொர்கின்  தமிழ் செய்தி தளமான ஏபிபி நாடு கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி அறிமுகமானது . மாநிலம் கடந்து நாடு கடந்து உலகம் முழுவதிலும் உள்ள அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகளைக் கண்டறிந்து, சரியான நேரத்தில் முக்கிய கட்டுரைகளாக, செய்திகளாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதை கடமையாக கொண்டுள்ளது. அத்தகைய ஏபிபி நாடுவின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



முதலமைச்சர் வாழ்த்து:


இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் “வணக்கம் 100 ஆண்டுகளுக்கு முன்பு வங்கத்தில் அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சிவப்பு மையை கொண்டு தொடங்கப்பட்டது தான் ஏபிபி நாளேடு. காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு செய்திதாள், செய்திதொலைக்காட்சி, டிஜிட்டல் செய்திதளம் என்று தற்போது இந்திய அளவில் முதன்மை ஊடகங்களில் ஒன்றாக திகழ்கிறது ஏபிபி செய்தி நிறுவனம். அதன் ஒரு அங்கமான ஏபிபி நாடு தமிழ் டிஜிட்டல் ஊடகம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாமாண்டில் அடியெடுத்து வைப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். லேட்டஸ்ட் நியூஸ், லேட்டஸ்ட் தமிழர்களுக்காக என்ற நோக்கத்துடன் மூன்றாமாண்டு பிறந்தநாளை கொண்டாடும் ஏபிபி நாடு மென்மேலும் வளர்ந்து அறம் பிறழாமல் தமிழர்களின் நலம் சார்ந்து செய்திப் பணியாற்றிட வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.