தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக துணை தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளார்.


காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஐஏஎஸ் அதிகாரியான ஸ்மிதா சபர்வால் வீட்டிற்குள் குற்றம்சாட்டப்பட்டுள்ள துணை தாசில்தார் நள்ளிரவு 11:45 மணிக்கு அத்துமீறி நுழைந்துள்ளார்.


சம்பவத்தை விவரித்துள்ள ஸ்மிதா சபர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த சம்பவம் மிகவும் வேதனையான அனுபவம் என குறிப்பிட்டுள்ளார். பிரசன்ஸ் ஆப் மைண்ட் காரணமாக தன்னுடைய உயிரை காப்பாற்றி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். "இது மிகவும் வேதனையான அனுபவம். 


நேற்று இரவு ஒருவர் என் வீட்டிற்குள் நுழைந்தார். பிரசன்ஸ் ஆப் மைண்ட் இருந்ததால் எனது உயிரை காப்பாற்றி கொண்டேன். இதில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டியது: நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைத்து கொண்டாலும் கதவுகள் பூட்டப்பட்டு இருக்கிறதா என்பதை நாமே உறுதி செய்ய வேண்டும். கதவுகளை பூட்ட வேண்டும். அவசர காலத்திற்கு 100ஐ அழைக்கவும்" என பதிவிட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர் அனந்த்குமார் ரெட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது மேட்ச்சலில் உள்ள மாவட்ட சிவில் சப்ளை அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணிபுரிகிறார்.


வீட்டிற்குள் வேறொரு நபர் நுழைத்திருப்பதை அறித்த சுமிதா உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்களிடம் தகவல் கொடுத்தார்.


உடனடியாக, வீட்டில் சோதனை நடத்திய பாதுகாவலர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபரை சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும், பிடிபட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஆனந்த் என்பது தெரியவந்தது. அவர் துணை தாசில்தாராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.


ஆனந்த் தனது நண்பருடன் பெண் ஐஏஎஸ் அதிகாரி சுமிதாவின் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளார். ஆனந்தின் நண்பர் அந்த வீட்டிற்கு வெளியே காரில் இருந்துள்ளார்.


அவரையும் பாதுகாவலர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர், பிடிபட்ட 2 பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.


பதவி உயர்வு தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சுமிதாவை சந்தித்து பேசவந்ததாக கைது செய்யப்பட்ட துணை தாசில்தார் ஆனந்த் கூறினார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் பெண் ஐஏஎஸ் அதிகாரி சுமிதா புகார் அளித்தார்.


சம்பவத்தை விவரித்துள்ள காவல்துறை ஆய்வாளர் ராஜசேகர், "ஸ்மிதா சபர்வாலின் கூற்றின்படி, தட்டும் சத்தம் கேட்டு அவர் கதவைத் திறந்திருக்கிறார். கதவுக்கு முன்னால் அந்நியர் ஒருவர் நிற்பதை கண்டார். உடனே சத்தம் போட்டு அவனை வெளியே போகச் சொல்ல இருக்கிறார். பின்னர்,  மௌனமாக முதல் மாடியிலிருந்து இறங்கி நடந்திருக்கிறார்" என்றார்


பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் நள்ளிரவில் துணை தாசில்தார் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.