இந்தியா
ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கியதன் மூலம் பிரபலமான கோவை கமலாத்தாள் பாட்டிக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வீடு கட்டிக்கொடுத்தார்.
கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சலால் இதுவரை 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலையை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும் என நாக்பூர் ஐஐஎம் கல்லூரி நிகழ்வில் குடியரசுதலைவர் பேசினார்.
காங்கிரஸ் தேவையில்லாத கட்சி என துக்ளக் வார இதழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
தமிழ்நாடு
மயிலாப்பூரில் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1000 சவரன் தங்க நகைகள், 50 கிலோ வெள்ளிப்பொருட்கள் , கார் பறிமுதல் செய்யப்பட்டன.
அடிப்படை கட்டமைப்பு இல்லாத ஷவர்மா கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பட்டணப்பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால், வரும் 22 ஆம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வங்ககடலில் உருவாகியுள்ள அசானி புயலால் வரும் நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சினிமா
விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வருகிற 11 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.
விஜயின் 66 ஆவது படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ்ராஜ் மற்றும் பிரபு ஆகியோர் இணைந்துள்ளனர். 2023 பொங்களுக்கு படம் ரிலீசாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜீத் நடிக்கும் புதிய படத்தின் நாயகியாக மஞ்சுவாரியர் நடிக்க உள்ளார்.
முதன்முறையாக அன்னையர் தினத்தில் தனது மகனை நடிகை காஜல் அகர்வால் அறிமுகப்படுத்தினார்.
விளையாட்டு
ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதிய போட்டியில் சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் சீசனில் மூன்றாவது முறையாக முதல் பந்தில்லேயே டக் அவுட்டாகி தனது விக்கெட்டை இழந்துள்ளார் விராட் கோலி.
உலகம்
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் வெளியே வரும்போது கட்டாயம் தங்களின் முகத்தை மறைத்துக் கொண்டு வரவேண்டும் என்று தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் இருந்து தமிழகம் செல்வோரைக் கண்டறிய இலங்கை அரசு புலனாய்வுப் பிரிவினரை நியமித்துள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்