பானிபட் அருகே சிறுத்தையை (leopard) மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு வனப் பாதுகாவலர்கள் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தனர்.


ஹரியானா மாநிலத்தில் பானிபட் அருகே உள்ள பாபோலி மாவட்டத்தில் பெஹராம்பூர் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்திருக்கிறது. அங்கிருந்த வயல் பகுதிகளுக்கு அருகில் சிறுத்தை இருப்பதை பார்த்த மக்கள் வனத்துறைக்கும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.


இந்த தகவலையெடுத்து, அந்த பகுதியின் காவல் துறையினரும், வன பாதுக்காப்பு அலுவலர்களும் சிறுத்தையை மீட்டும் பணியை ஈடுபட திட்டமிட்டனர்.






சனோலி  பகுதி காவல் துறை  ஆய்வாளர் ஜஹ்ஜீத் சிங் (Jagjeet Singh) , பாபோலி காவல் துறை ஆய்வாளர் பால்பிர் ( Balbir) இருவரும் காவல் துறையினருடன் சிறுத்தை மக்கள் வாழ்விடங்களுக்கு புகுந்துவிடாமல் தடுப்பதற்காக குறிப்பிட்ட இடங்களில் நின்றிருந்தனர்.


ரொத்தாக் பகுதியில் இருந்தௌ சிவ் சிங் ராவத் தலைமையில் வனத்துறை குழுவினருடன் காவல் துறையினரும் சிறுத்தை மீட்கும் பணியை தொடங்கினர். ஆனால், சிறுத்தை மீட்பு பணியில் ஈடுபட்டவர்களை தாக்க தொடங்கியது. அப்போது, உடன் இருந்த குழுவினரில் ஒருவர் சுதாரித்து கொண்டு, செயல்பட்டு வன பாதுகாவலர்களை சிறுத்தை தாக்குதலில் இருந்து காப்பாற்றினார்.


இதில் நான்கு பேர் காயமடைந்தனர். அவர்களை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இறுதியில், வனத் துறையினர் சிறுத்தையை பிடித்தனர்.


காவல் துறை இயக்குனர் ஷஷான்க் குமார் ஷாவன், சிறுத்தையை பிடிப்பதற்கு உதவிய ஜக்ஜீத் சிங்கின் திறமையான திட்டத்தைப் பாராட்டினார்.


பாபோலி கிராமத்தில் பிடிபட்ட சிறுத்தை யமுனா மாவட்டத்தில் உள்ள கலெசார் வனப்பகுதியில் விடப்பட்டதாக மாவட்ட வனத்துறை அதிகாரி ஷிவ் சிங் ராவத் தெரிவித்தார்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண