ஏர் இந்தியாவின் கீழ் 4 விமான சேவைகளை இணைக்கும் டாடா, விஸ்டாரா பிராண்ட்: இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஏர் இந்தியா லிமிடெட் கீழ் தனது நான்கு விமான சேவைகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தை டாடா குழுமம் பரிசீலித்து வருகிறது. தடுமாறி வரும் டாடாவின் விமான சேவையை மீண்டும் முழூ வீச்சில் செயல்படுத்துவதற்காக ஆலோசித்து வருகின்றனர்.


இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட்டின் தெற்காசிய நாட்டிலுள்ள உள்ளூர் துணை நிறுவனமான விஸ்டாரா விமான சேவையை கைவிடுவது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது, இன்னும் முடிவாகாத நிலையில் அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.  டாடா குழுமம், ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவின் பிரதிநிதிகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஒரு அறிக்கையில், "எஸ்ஐஏ மற்றும் டாடா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன, இரண்டு நிறுவனங்களுக்கிடையே உறவை பலப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது” என கூறப்பட்டிருந்தது.  


ஏர் இந்தியா அதன் புதிய உரிமையாளரான டாடாவின் கீழ் மறுசீரமைப்புக்கு தயாராகி வருகிறது. Full service carrier - 300 குறுகிய உடல் ஜெட் (narrow body jet) விமானங்களை பெற பரிசீலித்து வருகிறது, இது வணிக விமான வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய அளவாகும். ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாகி கேம்ப்பெல் வில்சன் (Campbell wilson) கடந்த மாதம், விமான நிறுவனம் அதனுடைய 113 விமானங்களை ஐந்து ஆண்டுகளில் மூன்று மடங்காக உயர்த்தும், இதில் குறுகிய மற்றும் பரந்த உடல் விமானங்களில் (narrow and wide body jet) அடங்கும்.


ஏர் இந்தியா நிறுவனம் சுமார் $5 பில்லியன் மதிப்பிலான நிதியுதவி பெரும் முயற்ச்சியில்  குறைந்தபட்சம் $1 பில்லியனை திரட்டுவதற்கான விவாதங்களில் ஈடுபட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் மாதம் முதல், 25 ஏர்பஸ் எஸ்இ (airbus SE ) மற்றும் ஐந்து போயிங் கோ (boeing co )விமானங்களைச் சேர்க்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டாடா கடந்த ஆண்டு அக்டோபரில் ஏர் இந்தியாவுக்கான ஏலத்தில் போட்டியாளர்களை 2.4 பில்லியன் டாலர் சலுகையுடன் தோற்கடித்து தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ஏர் இந்தியா மற்றும் பிற முழு-சேவை கேரியர் விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட் மற்றும் ஏர் ஏசியா இந்தியா இவை அனைத்தும் டாடா நிறுவனத்தின் கீழ் செயல்படும் விமான சேவைகளாகும். ஏர் இந்தியா இந்த மாத தொடக்கத்தில் ஏர் ஏசியாவின் உள்ளூர் முயற்சியை கையகப்படுத்துவதாகவும், அதை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உடன் இணைத்து குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமாக மாற்றுவதாகவும் தெரிவித்தது. ஒருங்கிணைந்த விமான சேவை 2023 இறுதிக்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.


அமெரிக்க இடைக்கால தேர்தல்: ஓங்குகிறது டிரம்ப்பின் கை…! பிளவுபட்ட அரசாங்கத்தால் என்ன செய்யப்போகிறார் பைடன்?


Viral Video : சேலை கட்டி வந்த நண்பர்கள்..! மணப்பெண் தோழியாக மாறி அசத்தல்..! சிகாகோவில் ருசிகரம்...