பீகாரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் சிறுநீரகங்களை திருடியதற்காக, மருத்துவரின் சிறுநீரகங்களை எடுத்து தனக்கு பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். செப்டம்பர் மாதத்தில் தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்ற சுனிதாதேவிக்கு அறுவை சிகிச்சை செய்து, இரண்டு சிறுநீரகங்கள் திருடப்பட்டது அண்மையில் தெரியவந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த சுனிதா தேவி(38).  கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்காக பாரியார்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செப்டம்பர் 3-ஆம் தேதி சென்றுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். பின்பு, சில நாட்களாகவே சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது.


பின்பு, முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்தனர்.அதாவது,  சுனிதா தேவியின் சிறுநீரகங்கள் இல்லை எனவும் அவை இல்லாமல் அவரால் உயிர்வாழ முடியாது என்றும் மருத்துவர்கள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்தனர். 




பின்பு, ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்து வருகிறார். சுனிதாவை சிகிச்சைக்காக பாட்னாவிலுள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்திற்கு பரிந்துரைத்தனர். அங்கு சிகிச்சைக்கு பின், மீண்டும் இந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சுனிதாவுக்கு சிறுநீரகம் இல்லாததால், ஒரு நாள் கூட டயாலிசிஸ் செய்யவில்லை என்றால், அவர் இறக்க நேரிடும் என்று முசாபர்பூர் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
இதுகுறித்து தேவியின் குடும்பத்தினர் மாவட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  அவர்கள் அளித்த புகாரின் பேரில் கருப்பை அறுவை சிகிச்சை செய்த கிளிக் உரிமையாளர் பவன்குமார் மற்றும் மருத்துவர் ஆர்.கே.சிங் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த கிளினிக்கானது பதிவு செய்யப்படவில்லை என்றும், மருத்துவரின் கல்வித் தகுதியும் போலியானது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள மருத்துவர் ஆர்.கே.சிங்கை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.


இந்த துயரம் குறித்து, சுனிதாதேவி பேசியதாவது, ”உடனடியாக இந்த மோசடியில் ஈடுபட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டு, அவரது இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டு தனக்கு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார். "மருத்துவரின் சிறுநீரகம் பொருத்தப்பட்டால் தான் என்னால் உயிர் வாழ முடியும் என்றார். இப்படி செய்தால் மட்டுமே , அடுத்து இதுபோன்று மோசடியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு உகந்த பாடமாக இருக்கும். பணத்துக்காக ஏழைகளின் உயிரோடு விளையாட மாட்டார்கள்” என அவர் தெரிவித்தார்.


"தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களை கவனித்துக்கொள்ள நான் உயிருடன் இருக்க வேண்டும் என சுனிதாதேவி தெரிவித்தார். கருப்பை பிரச்னைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது அறுவை சிகிச்சை செய்து இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவர்கள் அகற்றி விட்டதாகவும்,  அதன் பிறகு தனது உடல்நிலை மோசமடைந்தது எனவும் மற்றொரு மருத்துவமனைக்கு சென்றபோது தான், தனக்கு நேர்ந்த துயரம் குறித்து தெரிய வந்தது எனக் கூறினார்.




மேலும் படிக்க


அடுத்தடுத்து அத்துமீறல்: 14 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை; மீனவர்களுக்கு தொடரும் அவலம்!