அமெரிக்காவில் கீழ்சபை எனப்படும் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், மேல் சபை எனப்படும் செனட் சபையில் உள்ள 105 இடங்களில் 35 இடங்களுக்கும் இம்மாதம் 8-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த இடைக்கால தேர்தல் எப்போதுமே முக்கியமானதாக பார்க்கப்படும். மேலும் 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்த தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு பெரும் எதிர்பார்ப்புகள் உருவாகி இருந்தது. அதுமட்டுமின்றி ஜனாதிபதி ஜோ பைடனின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் சான்றிதழாகவும் இந்த தேர்தல் முடிவு அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களில் 218 இடங்களைக் கைப்பற்றினால் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும். தற்போதுள்ள நிலையில் டிரம்பின் குடியரசு கட்சி குறைந்தபட்சம் 218 இடங்களை குறுகிய பெரும்பான்மையுடன் வெல்லும் என்று அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.




தேவையான 218 இடங்கள்


இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்து சபையின் கட்டுப்பாட்டை திரும்பப் பெறுவதற்குத் தேவையான 218வது இடத்தை குடியரசுக் கட்சியினர் வென்றுள்ளனர். வாக்குகள் இன்னும் கணக்கிடப்பட்டு வருவதால், கடும் போட்டி நிலவி வருகிறது. அதனால் கட்சியின் பெரும்பான்மையின் முழு அளவு தெரிய இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று அசோசியேட்டட் பிரஸ் (AP) தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி..! மீண்டும் கனமழைக்கு தயாராகும் தமிழகம்! எப்போது தெரியுமா?


பிளவுபட்ட அரசாங்கம்


இந்த முடிவுகள் மூலம் டிரம்பின் குடியரசு கட்சி, பிரதிநிதிகள் சபையை கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த இரண்டு ஆண்டு கால கட்டம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிளவுபட்ட அரசாங்க நிலைமை அமையும் என்பதால், அது ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தலைவலியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.




பைடன் வாழ்த்து


இது குறித்து மெக்கார்த்தி வெளியிட்ட டீவீட்டில், "அமெரிக்கர்கள் ஒரு புதிய திசைக்கு தயாராக உள்ளனர், ஒயிட் ஹவுஸில் குடியரசுக் கட்சியினர் சேவை செய்ய தயாராக உள்ளனர்." என்றார். இதற்கிடையில், ஜனாதிபதி பைடன் குடியரசுக் கட்சியினர் மற்றும் மெக்கார்த்தியை வாழ்த்தினார். மேலும் உழைக்கும் குடும்பங்களுக்கு முடிவுகளை வழங்க ஒயிட் ஹவுஸ் குடியரசுக் கட்சியினருடன் இணைந்து பணியாற்றுவதாக உறுதியளித்தார். “கடந்த வாரத் தேர்தல்கள் அமெரிக்க ஜனநாயகத்தின் வலிமையையும் பின்னடைவையும் வெளிப்படுத்தின. தேர்தல் மறுப்பாளர்கள், அரசியல் வன்முறைகள் மற்றும் மிரட்டல்களை கடுமையாக நிராகரித்தனர். அமெரிக்காவில், மக்களின் விருப்பம் மேலோங்குகிறது என்று ஒரு உறுதியான அறிக்கை இருந்தது, ”என்று பைடன் ட்விட்டரில் எழுதினார்.