இன்றைய நாளில் காலையில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகளின் தலைப்பு செய்திகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சுருக்கமாகவும் தெளிவாகவும் அவற்றை நீங்கள் அறியலாம். 


1.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 வருடத்திற்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய உடனடியாக உத்தரவிடவேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


2.தமிழகத்தில் நேற்று புதியதாக 35 ஆயிரத்து 579 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 6 ஆயிரத்து 73 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 17 லட்சத்து 34 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 4 லட்சத்து 62 ஆயிரத்து 448 ஆக உயர்ந்துள்ளது.


3.தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு அச்சம் கொள்ள வேண்டாம் -சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன்


4.கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இரண்டாவது அலையில் , தமிழகத்தில் 0-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.    


5. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார்.


6. தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் - திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


7. வரும் 24ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.


8. கேரளாவில் முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் பதவியேற்றுக் கொண்டார்.


9. 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இரண்டாவது நாளாக இன்று மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.


10. கொரோனா தொற்று காலத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை பாதுகாக்க உறவினர் பராமரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


11. மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


12. காற்றோட்ட வசதி கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் - புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.


13. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை காண 4000 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ஹாம்ப்ஷயர் கவுண்டி கிளப் தலைவர் ராட் பிரான்ஸ்குருவ் தெரிவித்துள்ளார்.


14. இஸ்ரேல் நாட்டுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டு உள்ளது என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.


15. உலகளவில்  16.58 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 34.44 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 14.65 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 29,982 பேர் கொரோனாவால் பாதிப்பு; ஒரே நாளில் 659 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் ஒரே நாளில் 83,367 பேர் பாதிப்பு, 2,527 பேர் உயிரிழப்பு. 


உள்ளூரில் இருந்து உலகள் வரையிலான இன்னும் இது போன்ற செய்திகளை சுருக்கமாகவும், தெளிவாகவும் அறிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் www.abpnadu.com  இணையதளத்துடன்.