Breaking News LIVE: விடைபெறுகிறார் தலைமை தளபதி : ஒரே தகன மேடையில் வைக்கப்பட்ட தாய், தந்தையரின் உடலுக்கு தீமூட்டினர் க்ருத்திகா, தாரிணி
Breaking News Tamil LIVE Updates: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...
தாய், தந்தையரின் உடலுக்கு தீமூட்டினர் க்ருத்திகா, தாரிணி
ஒரே தகன மேடையில் வைக்கப்பட்டன பிபின் ராவத், மதுலிகா ராவத் உடல்கள்.
விடைபெறுகிறார் தலைமை தளபதி : தந்தை பிபின் ராவத், தாய் மதுலிகா ராவத் உடல்களுக்கு இறுதி சடங்குகள் செய்யும் மகள்கள்..
முப்படை தளபதி, அவரது மனைவி உடல்களுக்கு, அவரது மகள்கள், குடும்பத்தினர் மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்
உத்தரகாண்ட் முதல்வர், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் தலைமை தளபதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்
தலைமை தளபதி உடலுக்கு அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி.. இறுதி நிமிட அஞ்சலியில் கனத்த மெளனம்
விடைபெறுகிறார் தலைமை தளபதி : பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உடல்களுக்கு ராணுவ அஞ்சலி
இறுதி ஊர்வலத்தில் ஏராளாமானோர் அஞ்சலி.. கைகளில் தேசியக்கொடி ஏந்தி ஏராளமானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு
விடைபெறுகிறார் தலைமை தளபதி : கண்டோன்மெண்ட் மயானத்தில் தலைமை தளபதி மற்றும் அவரது மனைவியின் உடல்கள் தகனம் செய்யப்பட இருக்கிறது..
தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
டெல்லியில் உள்ள வீட்டில் பிபின் ராவத், மனைவி மதுலிகா உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிபின் ராவத் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறுகிறது.
ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பிரிகேடியர் லிட்டெருக்கு டெல்லியில் இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது. டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் லிட்டெர் உடலுக்கு பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
யூட்யூபர் மாரிதாஸ் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதுரை மாநகர பாஜக தலைவர் டாக்டர். சரவணன் உள்ளிட்ட 50பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் திருப்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து 36வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்படுகிறது.
முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மும்பை தளபதிகள் மரியாதை செலுத்தினர். இன்று மாலை முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
Background
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மும்பை தளபதிகள் மரியாதை செலுத்தினர். இன்று மாலை முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -