Breaking News LIVE: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : 8 பேர் உயிரிழப்பு - தமிழக வனத்துறை அமைச்சர்

Breaking News Tamil LIVE Updates: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...

ராஜேஷ். எஸ் Last Updated: 08 Dec 2021 03:46 PM
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - 8 பேர் உயிரிழப்பு


குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - 8 பேர் உயிரிழப்பு - தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்


குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - மரத்தில் மோதியதால் விபத்தா?

ராணுவ ஹெலிகாப்டர் மரத்தில் மோதிய தடுமாறியதாகவும், தள்ளாட்டத்துடன் வானில் பறந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக தகவல்

தாக்கல் செய்யவுள்ளார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லியில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - டெல்லியில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை

நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் வருகை

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் வருகை

குன்னூர் விரைந்த மருத்துவர்கள் குழு

கோவையில் இருந்து 10 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு குன்னூர் விரைந்தது

4 மணி அளவில் செய்தியாளர்கள் சந்திப்பு

மத்திய அமைச்சர்கள் கூட்டம் முடிந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் செய்தியாளர்கள் சந்திப்பு - அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரம் தொடர்பாக தெரிவிக்க உள்ளனர். 

15 பேர் கொண்ட குழு விரைவுகிறது 

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - ராணுவத்தின் 15 பேர் கொண்ட குழு சம்பவ இடத்துக்கு விரைவுகிறது 

தள்ளாட்டத்துடன் வந்த ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர் தள்ளாட்டத்துடன் வந்ததாக நேரில் பார்த்த தொழிலாளர்கள் சிலர் தகவல்

மாலை 5 மணி அளவில்

மாலை 5 மணி அளவில் முதலமைச்சர் ஸ்டாலின் கோவையை சென்றடைவார் எனத் தகவல்

கோவை விரைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - கோவை விரைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

நீலகிரி விரைகிறார் டிஜிபி சைலேந்திரபாபு

குன்னூர் ஹெலிகாப்டர்  விபத்து - நீலகிரி விரைகிறார் டிஜிபி சைலேந்திரபாபு

தமிழக அரசு அவசர ஆலோசனை 

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து தமிழக அரசு அவசர ஆலோசனை 

குன்னூர்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

மீட்புப் பணியை துரிதப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

மீட்புப் பணியை துரிதப்படுத்தவும், உரிய மருத்துவ சிகிச்சையை அளிக்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

நீலகிரி ஆட்சியரிடம் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்

ஹெலிகாப்டர் விபத்து குறித்து நீலகிரி ஆட்சியரிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்

டிசம்பர் 20 முதல் 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு

தனிதேர்வர்களுக்கான 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு டிசம்பர் 20 முதல் டிசம்பர் 24 வரை தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.5000 வழங்கும் திட்டம் தொடக்கம்


ஆஷஸ் முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 147 ரன்களுக்கு ஆல்-அவுட்டான இங்கிலாந்து

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. 



முதல் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், ஐந்து விக்கெட்டுகள் எடுத்து அசத்தி இருக்கிறார். இன்னும் முதல் நாள் ஆட்டம் முடியாத நிலையில், அடுத்து ஆஸ்திரேலியா களமிறங்குவதற்குள் மழை குறுக்கிட்டுள்ளதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது

வால்பாறை அருகே யானைக்குட்டி உயிரிழப்பு

வால்பாறை அருகே தோனிமுடி எஸ்டேட்டில் 2 வயது யானைக்குட்டி உயிரிழந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா நிவாரணம் திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

Background

டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தை வாபஸ் பெற விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓராண்டுக்கு மேலாக நீடித்து வரும் விவசாயிகள் போராட்டம் இன்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் 5 கோரிக்கைகளை ஏற்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளதால், விவசாயிகள் வீடு திரும்பத் திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.