Breaking News LIVE Today: லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல்.. முக்கிய குற்றவாளியாக மத்திய அமைச்சர் மகன்!

Breaking News LIVE Today Tamil, 3 Jan: நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே அறிந்து கொள்ளலாம்.

முகேஷ் Last Updated: 03 Jan 2022 12:31 PM
லக்கிம்பூர் வன்முறை - 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

 லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் 5000 பக்க குற்றப்பத்திரிகையை உத்தரப்பிரதேச காவல்துறையினர்  மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில்,மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

சென்னை மழைநீர் தேக்கம் - முதலமைச்சரிடம் முதற்கட்ட அறிக்கை தாக்கல்

சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான வல்லுநர் குழு முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. 


 

கோவை சிறுமி கொலை : கைதான நபர் மீது குண்டர் சட்டம்

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முத்துக்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை - 2 தனிப்படைகள் அமைப்பு

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நடந்த கொள்ளை தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ஸ்ரீ காந்த் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் கொள்ளை...

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்டரில் ரூ.1.32 லட்சம் கொள்ளை அடித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

"அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்" - முதலமைச்சர் முக ஸ்டாலின்

சிறார்களுக்கான தடுப்பூசி திட்ட தொடக்க விழாவில் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் 1,700 பேருக்கு ஒமிக்ரான் தொற்று...

இந்தியாவில் இதுவரை 1,700 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.அதேபோல், தற்போது வரை இந்தியாவில் 33,750 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

சிறார்களுக்கான தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் 

15-18 வயது சிறார்களுக்கான தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் 

நாடு முழுவதும் 15 - 18 வரையிலான சிறார்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி பணிகள் தொடக்கம்..

நாடு முழுவதும் 15 - 18 வரையிலான சிறார்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி பணிகள் தொடக்கம். இணை நோய் இருப்பவர்களுக்கு ஜனவரி 10 முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Background

உலகளவில் இதுவரை 29.05 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதில் 25.45 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கொடிய தொற்றினால் 54.60 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சிகர தகவலும் கிடைத்துள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.