Breaking News LIVE Today: டெல்லியில் 24 மணிநேரத்தில் 3000 பேருக்கு உறுதியான தொற்று.. 8 மாதங்களில் இதுவே அதிகம்
Breaking News LIVE Today Tamil, 2 Jan: நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் பளாக்கில் கீழே அறிந்து கொள்ளலாம்.
அதிகரிக்கும் ஒமிக்ரான் அச்சுறுத்தல்.. மேற்குவங்கத்தில் கல்வி நிறுவனங்கள் மூடல்..
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல், இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தற்போதுவரை இந்த தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,525 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை இதுவரை 117 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 74 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Background
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -