Breaking News LIVE Today: சென்னை கடற்கரை - பொதுமக்களுக்கு நாளை முதல் தடை..!
Breaking News LIVE Today Tamil, 1 Jan: நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் பளாக்கில் கீழே அறிந்து கொள்ளலாம்.
சென்னை கடற்கரையில் நாளை முதல் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நடைபயிற்சி செல்வோருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பரவல் காரணமாக மறு உத்தரவு வரும் வரை கடற்கரை மணல்பரப்பில் மக்களுக்கு அனுமதியில்லை. பிரத்யேக நடைபாதையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 5ஆம் தேதி தொடங்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளாது.
கொரோனா பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், தீவிரமாக கண்காணிக்க தனிக் குழுவை அமைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மேலும் பல்வேறு கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சிவகாசி எம். புதுப்பட்டி அருகே இருக்கும் மேட்டுப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன்,கே.என்.நேரு,சேகர்பாபு,பெரிய கருப்பன்,எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 1,431 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதில், பாதிக்கப்பட்ட 488 பேர் குணமடைந்து விட்டதாகவும், 943 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Background
சிவகாசி அருகே பாறைப்பட்டியில் உள்ள ஆர்.வி.பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆலை வெடித்தாகவும், தொழிலாளர்களை மீட்க மீட்பு பணிக்காக தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -