Breaking News LIVE Today: புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கப்படுகிறது, திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு அனுமதி - முதலமைச்சர் ஸ்டாலின்

Breaking News LIVE Today Tamil, 31 Dec: நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் பளாக்கில் கீழே அறிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 31 Dec 2021 07:55 PM
சலூன்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி - தமிழ்நாட்டில் இறுகும் கட்டுப்பாடுகள்..

சலூன்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி - தமிழ்நாட்டில் இறுகும் கட்டுப்பாடுகள்..

புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கப்படுகிறது, திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு அனுமதி - முதலமைச்சர் ஸ்டாலின்

புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கப்படுகிறது, திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு அனுமதி - முதலமைச்சர் ஸ்டாலின் 

தமிழ்நாட்டில் மேலும் 74 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

தமிழ்நாட்டில் ஏற்கெனவே 46 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், மேலும் 74 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருநாள் மழைக்கு மீண்டும் மிதக்கும் சென்னை - இபிஎஸ்

ஒருநாள் மழைக்கு மீண்டும் மிதக்கும் சென்னை, என்ன சாதித்தது 8 மாதங்களில் இந்த திமுக அரசு? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
 வடகிழக்கு பருவமழை ஒய்ந்திருந்தபோதே வடிகால்களை சீரமைத்திருந்தால் பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம் என்றும், சென்னையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே 3 பேரின் இறப்புக்கு காரணம் என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர் எனவும் கூறினார்.

காவல்துறை திமுகவின் தொண்டர் படையாக மாறிவிட்டது - சிவி சண்முகம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அதிமுக சட்ட ஆலோசனைக் குழுவினர் சந்தித்ததை தொடர்ந்து, தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பிரச்னை குறித்து ஆளுநரிடம் எடுத்துரைத்தாகவும், காவல்துறை திமுகவின் தொண்டர் படையாக மாறிவிட்டதாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

Background

மதுரையில் ஜனவரி 12 ல் மோடி பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி பங்கேற்று பொங்கல் கொண்டாட உள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இத்தகவலை தெரிவித்துள்ளார். 


தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12ம் தேதி தமிழகம் வருகிறார். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதியுதவியுடன், இராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்க கடந்தாண்டு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து கட்டமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. தற்போது, இதன் பணிகள் முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடி திறந்து வைக்க தமிழகம்  வருகிறார். ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் 150 இடங்கள் என 1650 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.   

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.