IND vs ENG Old Trafford Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், கேப்டன் கில், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்தினர்.
மனமுடைந்த இங்கிலாந்து:
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓல்ட் ட்ராஃபர்டில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் 317 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி களமிறங்கியது. ரன் ஏதும் எடுக்காமலேயே இரண்டு விக்கெட்டுகளை இழக்க, இன்னிங்ஸ் தோல்வியை கண்டுவிடுவோமோ என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால், கேப்டன் கில் சதம் விளாசியதோடு, கே.எல். ராகுலும் தனது பங்கிற்கு 90 ரன்களை சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்களை தொடர்ந்து வந்த ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அடுத்தடுத்து சதம் விளாசி, இங்கிலாந்தின் வெற்றிக் கனவை சிதறடித்தனர். ஒருகட்டத்தில் ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியும் சோர்வில் மூழ்க, போட்டியை முன்கூட்டியே ட்ரா செய்துகொள்ளலாம் என கேப்டன் ஸ்டோக்ஸ் பரிந்துரைத்தார். ஆனால், அதெல்லாம் முடியாது மீதமுள்ள நேரத்திற்கும் பந்துவீசுங்கள் என ஜடேஜா கோரிக்கையை மறுத்துவிட்டார். இதனை மையப்படுத்தியும் , இங்கிலாந்து மற்றும் ஸ்டோக்ஸை விமர்சித்தும் ஏராளமான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்கள்: