விளையாட்டு:
துபாயில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், நான்காவது முறையாக சென்னை அணி இது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
தமிழ்நாடு:
- நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறப்பட்ட T-23 புலி தெப்பக்காடு-மசினக்குடி சாலை பகுதியில் நேற்று பிடிபட்டிடது.
- இலங்கைக் கடற்படை சிறை பிடித்துள்ள 23 மீனவர்களை உடனே விடுவிக்கவும், இந்தியா - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைசச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
- மத்திய கிழக்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புதிதாக இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
- சிவகாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 8 லட்சம் பேர் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, உச்சநீதிமன்றம் - தேசிய பசுமை தீர்பாணையம் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்டுள்ள பட்டாசு விற்பனையை அனுமதிக்க வேண்டுமெனக் கோரி 4 மாநில முதலமைச்சர்களுக்குக் தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதினார்.
- சென்னை அய்யப்பாக்கத்தில் உள்ள ஐசிஎம்ஆர்-தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில், ஐசிஎம்ஆர் பொது சுகாதார பள்ளியின் புதிய கட்டிடத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
- தூத்துக்குடியில் 18 வழக்குகளில் தேடப்பட்டு வந்த துரைமுருகன் என்ற குற்றவாளியை காவல்துறை என்கவுண்டர் செய்தனர். இந்த, தூத்துக்குடி என்கவுண்டர் நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் வன்மையாகக் கண்டித்து வருகின்றனர்.
இந்தியா:
- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடி நேற்று 7 புதிய பாதுகாப்பு தளவாட நிறுவனங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். முன்னதாக, ஆயுத தொழிற்சாலை வாரியத்தை ஒரு அரசு துறையிடம் இருந்து, 100 சதவீதம் அரசுக்கு சொந்தமான 7 பெருநிறுவனங்களாக மாற்ற அரசு முடிவு செய்தது. இதற்கேற்ப, 7 புதிய பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள் மியூனிசன்ஸ் இந்தியா லிமிடெட் (MIL), ஆர்மர்ட் வெயிக்கல்ஸ் நிகாம் லிமிடெட் (AVANI); அட்வான்ஸ்டு விபான்ஸ் அண்ட் எக்யூப்மென்ட் நிறுவனம் (AWE India); ட்ரூப் கம்போர்ட்ஸ் லிமிடெட் (TCL); யந்திரா இந்தியா நிறுவனம் (YIL); இந்திய ஆப்டெல் நிறுவனம் (IOL); மற்றும் கிளைடர்ஸ் இந்தியா நிறுவனம் (GIL) ஆகிய பெயர்களில் இணைக்கப்பட்டுள்ளன.
- உலகளாவிய பட்டினி அறிக்கை 2021யில் அடிப்படை யதார்த்தம் மற்றும் உண்மை அல்லாதது என பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் சரியான முறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், அறிக்கையை வெளியிடும் முன், அதை வெளியிட்ட நிறுவனங்கள் அதை சரிபார்ப்பதில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளது.