மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.   










இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டாக்டர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 






மன்மோகன் சிங் தொடர்பாக பரவிய வதந்தி குறித்து காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செயலர் பிரனாவ் ஜா  தனது ட்விட்டர் பதிவில்,"முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை தொடர்பாக பல வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கொண்டு தகவல்கள் தேவைப்பட்டால் தொடர்ந்து தெரிவிப்போம்," என்று  தெரிவித்தார்.






இதற்கிடையே, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா நேரில் சென்று நலம் விசாரித்தார். 


மன்மோகன் சிங்: 1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார்


 2004-இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக அப்பதவியில் இருந்து சிறப்பாக செயல்புரிந்தார்.சீக்கிய சமயத்தைச் சேர்ந்த இவர், இந்து சமயத்தை சாராத முதல் இந்தியப் பிரதமர் ஆவார். மன்மோகன் சிங்கின் வயது 89 ஆகும்.