Tamil News Headlines Today:
- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் , துணைத் தலைவர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி சென்னையில் அவரது மணிமண்டபத்தில் உள்ள உருவச்சிலைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
- தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், மாநிலங்களவை உறுப்பினராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்
- உள்ளாட்சி தேர்தலில் சாத்தியமுள்ள வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
- மாநிலத்தில் குற்றச்சம்பவங்களை தடுத்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
- நீலகிரியில் 13 வயதான ஆண்புலி ஒன்றை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதுவரை, இந்த புலி 4 மனிதர்களையும், 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளது. ஏற்கெனவே 2014, 2015, 2016ம் ஆண்டுகள் மேன் ஈட்டர் புலிகள் நீலகிரி மாவட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டன. அதேபோல 13 பேரைக்கொன்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆவ்னி என்ற புலியும் 2018ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டது
- 2021 செப்டம்பர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாயாக ரூ.1,17,010 கோடி வசூலாகி உள்ளது, இதில் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.20,578 கோடியும் மாநில ஜிஎஸ்டியாக ரூ.26,767 கோடியும் ஐஜிஎஸ்டி ஆக ரூ.60,911 கோடியும் (இறக்குமதி பொருட்களுக்காக வசூலிக்கப்பட்ட ரூ.29,555 கோடி உட்பட) மற்றும் செஸ் வரியாக ரூ.8,754 கோடியும் (இறக்குமதி பொருட்களுக்காக வசூலிக்கப்பட்ட ரூ.623 கோடி உட்பட) வசூலாகியுள்ளது.
- தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2.0 மற்றும் புதுப்பித்தல் மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் இயக்கம் (அம்ருத்) ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். கழிவுகள் இல்லாத’ மற்றும் ‘தண்ணீர் பாதுகாப்புடன்’ அனைத்து நகரங்களையும் மாற்றும் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் இந்த இரு இயக்கங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நகர்புற மேம்பாட்டு திட்டங்களுடன், மத்திய அரசு அம்ருத் திட்டங்களை ஒருங்கிணைத்து வளர்ச்சிக்கு உதவ வேண்டுமென்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்