News Headlines : என்ன ஆவார் சசிகலா... கேரள கொடூரம்... பங்களா பாய்ஸ் அதிர்ச்சி... இன்னும் பல!
Headlines Today, 18 Oct: இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.
Continues below advertisement

தலைப்புச் செய்திகள்
தமிழ்நாடு:
Continues below advertisement
- அதிமுக கட்சி தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி அதிமுக பொன்விழா ஆண்டாக தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் சசிகலா கலந்து கொண்டார். அங்கு, ‘கழக பொதுச்செயலாளர் சசிகலா’ என கல்வெட்டு வைக்கப்பட்டிருந்தது. தொண்டர்களிடம் உரையாற்றிய சசிகலா, நாம் ஒன்றாக வேண்டும்; கழகம் வென்றாக வேண்டும், நமக்குள் ஏற்பட்ட பிரிவுகள்தான் நம் எதிரிகளுக்கு இடம் கொடுத்துவிட்டது என்று தெரிவித்தார்.
- 'தியாகத் தலைவி’, ‛புரட்சித் தாய்’ என்கிற எந்த பட்டத்தைப் பயன்படுத்தினாலும் தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் சசிகலாவை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
- தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று ஐந்து (நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி,நாமக்கல்) மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
- பாஜக பிரமுகர் கல்யாணராமனை அக்டோபர் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஜார்ஜ் டவுண் நீதிமன்றம் உத்தரவிட்டது.
- தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே சமயம், 15 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.1,411 பேர் குணமடைந்தனார்.
- வெங்காயம், தக்காளி, மற்றும் உருளைக்கிழங்கு விலைகள் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு குறைவு என நுகர்வோர் விவகாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது உருளைக்கிழங்கு விலை கடந்த 14ம் தேதி கிலோ ரூ.27 ஆக இருந்தது. கடந்தாண்டு இதே தேதியில் இது கிலோ ரூ.40 ஆக இருந்தது. வெங்காயம் விலை தற்போது ரூ.42 ஆக உள்ளது. கடந்தாண்டில் இது ரூ.50 ஆக இருந்தது.
இந்தியா:
- ஜம்மு -காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் பீகாரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் யூனியன்பிரதேசம் ஸ்ரீநகரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அரவிந்த்குமார் ஷா-வின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
- மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை . கொரோனா பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் இருந்து முதன்முறையாக மும்பையில் உயரிழப்பு பதிவாகவில்லை.
- கடந்த 24 மணி நேரத்தில், நாடுமுழுவதும் 14,146 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 19,788 பேர் குணமடைந்துள்ளனர் குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.10 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
விளையாட்டு:
- உலககோப்பை போட்டிக்கான சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்கான தகுதிப்போட்டிகள் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. இதன்படி, குரூப் பி பிரிவில் நடைபெற்ற முதல் போட்டியில் ஓமனும், பப்புவா நியூ கினியா அணிகளும் நேருக்கு நேர் மோதின.இந்த ஆட்டத்தில், ஓமன் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இதே போல் மற்றொரு ஆட்டத்தில் வங்கதேசத்தை ஸ்காட்லாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.