News Today LIVE: உள்ளாட்சித் தேர்தல் - அதிமுக இறுதிப்பட்டியல் வெளியீடு
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் 18 இடங்கள், விழுப்புரம் 11, திருப்பத்தூர் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அமைக்க மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநிலம் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் உதய்பூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் 2 விமானிகள் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவர் இறந்தனர்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களைவை உறுப்பினர் இடங்களுக்கு திமுவைச் சேர்ந்த டாக்டர் கனிமொழி சோமு, கேஆர் என் ராஜேஸ்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல்
ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் கூட்டணிக்கு ஒதுக்கியது போக மற்ற இடங்களில் திமுக போட்டியிடும் என துரைமுருகன் அறிவிப்பு
138 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் காங்கிரஸ் 3, விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் போட்டி
உள்ளாட்சி தேர்தலில் பேர்ணாம்பட் மாவட்ட கவுன்சிலர் இடம் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
வேலூர் மாவட்டத்தில் உள்ள 14 மாவட்ட கவுன்சிலருக்கான இடங்களில் ஒரு இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக.
Background
Latest News in Tamil
- நீட் தேர்வுக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்குழு அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு
- நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக அரசே தனி சட்டத்தை இயற்றி குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற்று விலக்கு பெற பரிந்துரை
- நீட் தேர்வு ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எதிரான பாரபட்சமான தேர்வு முறை – நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை
- ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 54 ஆயிரத்து 45 வேட்புமனுக்கள் தாக்கல்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -