சுப்பிரமணிய பாரதியின் 100- வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வை நிறுவுவதாக மத்திய அரசு அறிவித்தது. 


கச்சா பாமாயில், கச்சா சோயாபீன்ஸ் எண்ணெய், கச்சா சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கான நிலையான வரி வீதத்தை இன்று முதல் 2.5 சதவீதமாக சுங்கத்துறை குறைத்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சோயாபீன்ஸ், சூரிய காந்தி எண்ணெய்க்கான நிலையான வரி 32.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 


உளவுத்துறையில் பணியாற்றவரை ஆளுநராக நியமித்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, தமிழ்நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ரவியை குடியரசுத் தலைவர் திரும்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.   


Thirumavalavan | புதிய ஆளுநரை திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்


குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அடுத்தாண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த ராஜினாமா குஜராத் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   


Vijay Rupani Resignation: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா


கேரள மாநிலத்தில் கிறிஸ்துவ பெண்கள்,  ‘காதல் மற்றும் போதைப்பொருள் ஜிஹாத்’  ஆகியவற்றுக்கு இரையாகி வருவதாக கத்தோலிக்க பாதிரியார் கருத்து தெரிவித்த நிலையில் அதனை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டித்துள்ளார்.


காதல், போதைப்பொருள் ஜிஹாத் என்னும் பேச்சு.. பாதிரியாரைக் கண்டித்த கேரள முதல்வர்.. ஆதரித்த பாஜக 


அன்று மதியம் 12.30 மணிக்கு எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணி மண்டபத்தில் நடைபெறவுள்ள சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டம் மற்றும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 100-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் கலந்து கொள்கின்றனர். 


இன்று தமிழ்நாடு முழுவதும் 40,000 தடுப்பூசி முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி திட்டமிடப்பட்டுள்ளது. 


   


அமெரிக்காவின் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் எம்மா ரடுகானு வெற்றி பெற்றார். 18 வயதே ஆன எம்மா ரனுகாடு இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு தரவரிசையில் 361வது இடத்தில் இருந்தார். தகுதிச் சுற்று போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றதன் மூலமே எம்மா ரடுகானு, அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றார். தனது சிறப்பான ஆட்டத்தால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்ற எம்மா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதிப் போட்டியில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மரியா சக்காரியுடன் மோதி வெற்றி பெற்றார். எம்மா இறுதிப்போட்டியில் லைலா பெர்ணாண்டசுடன் மோத உள்ளார். லைலா பெரணாண்டோசிற்கு 19 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.