• தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநிலத்தின் கூடுதல் கவர்னராக பணியாற்றி வந்தார். அவரை தற்போது முழுநேர பஞ்சாப் ஆளுநராக அறிவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாகலாந்து கவர்னரான ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டின் கவர்னராக நியமித்து உத்தரவிட்டுள்ளார். 

  • தமிழ்நாட்டில் கோவிட்-19 நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அடுத்தமாதம் 31ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  • எதிர்வரும் பண்டிகை காலங்களில் கொவிட்- சரியான நடத்தை விதிமுறையை பின்பற்றி கவனமாக இருப்பது அவசியம் என கொவிட்-19 செயற்குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பரவிய சார்ஸ்-கோவ்-2 தொற்றுகளின் மரபணுவை ஆராய்ந்தபோது ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் புதிய வகைகள் உருவாகவில்லை. இரண்டாவது அலையின் இறுதி கட்டமாக, நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதவர்கள் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் கூறினார். 


  • தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பணியிடத்தை நிரப்புவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான திரு கே பி முனுசாமி, திரு. ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் கடந்த மே 7-ஆம் தேதி தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதேபோல மேற்கு வங்கம், அசாம், மத்தியப் பிரதேசத்திலும் தலா ஒருவர் ராஜினாமா செய்து, மகாராஷ்டிராவில் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததால் மொத்தம் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் தற்போது காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பால் தயாரிக்கப்பட்ட இந்தியா தரவரிசை பட்டியல் 2021 நேற்று வெளியானது. இதில், ஒட்டுமொத்த பிரிவிலும் பொறியியலிலும் சென்னை ஐஐடி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.

  • தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த நான்கு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

  • 3200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தாமிரபரணி நாகரிகத்தைக் காட்சிப்படுத்த ‘பொருநை அருங்காட்சியகம்’ அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.  



  • மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைப்பதற்கான மசோதா இன்று பேரவையில் நிறைவேறியது.

  • செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூடும்போது, அவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
      
    ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம், அடுத்த மாதம் செயல்பாட்டிற்கு வரும் என்று மாநில அமைச்சர் கே என் நேரு கூறியுள்ளார்.

  • மேலும், வாசிக்க: 

  • தோவலின் தோழன்.. மோடியின் நம்பிக்கை.. யார் இந்த ஆர்.என்.ரவி?