நடப்பாண்டில் நீட் தேர்வு நடைபெறுமா? என்ற கேள்விக்கு அரசு தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். 


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,62,622 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 4 ஆயிரத்து 506 நபர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 


கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, பெரம்பலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை  முந்தைய நாளை விட சற்று கூடுதலாக உள்ளது. 


நாட்டின் 16 மாநிலங்களில் உள்ள கிராமங்களில், பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் மூலம் மாற்றியைமக்கப்பட்ட பாரத் நெட் திட்ட திட்டத்தை அமல்படுத்த பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ், சர்வதேச ஏலப் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்கள் பாரத் நெட் திட்டத்தை  செயல்படுத்தப்படுகிறது. 


புதுச்சேரி: 264 பேருக்கு கொரோனா தொற்று; ஒருவர் உயிரிழப்பு!


புதுச்சேரியில் 38.23 சதவித பயனாளிகளுக்கு முதற்கட்ட தடுப்பூசி நிர்வகிக்கப்பட்டுள்ளது துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 



Caption


தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்ட சைலேந்திர பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்றைய தினம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், காவல்துறை தலைமை இயக்குனர் ஜெ.கே திரிபாதி பணிஓய்வு பெறுவதையொட்டி முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார். 



மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடத்திய தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி எழுத்து தேர்வு(I) முடிவுகளை வெளியிட்டது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முடிவுகள் வெளியான 2 வாரத்துக்குள், இந்திய ராணுவத்தின் இணையதளத்தில்  joinindianarmy.nic.in பதிவு செய்ய வேண்டும். 


பாதுகாப்பு படைகள் சிறப்பு அதிகார சட்டத்தின்படி, நாகாலாந்து பதற்றமான பகுதி என்ற அறிவிப்பை, மத்திய அரசு மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டித்துள்ளது.


Nagaland| நாகாலாந்து அமைதி குலைந்த மாநிலம்- மத்திய அரசு அறிவிப்பு   




தேசிய மருத்துவர்கள் தினத்தில், மருத்துவர்களிடம்  பிரதமர் நரேந்திர மோடி, 2021 ஜூலை 1ம் தேதி மாலை  3 மணிக்கு உரையாற்றுகிறார்.


கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூபாய் 4 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசில் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் மனுத்தாக்கல் செய்தார். மத்திய அரசு தரப்பில்,"பொருளாதார நெருக்கடி காரணமாக கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு தொகை வழங்குவது சாத்தியமில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கத் தேசிய பேரிடர் நிதியைப் பயன்படுத்தினால், அந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி காலியாகிவிடும்" என தெரிவிக்கப்பட்டது.