தமிழ்நாட்டில் முகாம்களுக்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக, தலா ரூ.4000 வழங்கும் திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் தொடங்கி வைத்தார்.


மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் போக்கிற்கு எள்முனையளவு கூட இடம் அளிக்காமல், தமிழ்நாட்டின் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 


Mekedatu Dam Project : மேகதாது அணை: விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்- இபிஎஸ்


தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,183 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. 18,232 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது, கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 89,009 ஆக குறைந்துள்ளது. கடந்த, 24  மணி நேரத்தில் 180 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. நாளை முதல் நடைமுறைக்கு தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   


குறையும் கொரொனா... தமிழ்நாட்டில் இன்று முழு நிலவரம் என்ன?


தமிழ்நாட்டில் மியூகோர்மைகோசிஸ் நோயால் 2,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுபவர்கள் முதல்வரின் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை வழங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார். 


சுமார் 2.87 கோடி (2,87,71,085) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன. அடுத்த மூன்று நாட்களில் கூடுதலாக 52,26,460 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கவிருக்கிறது.


அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று (ஜூன் 20) முதல் முழுமையாக நீக்க அமைச்சரவை தெலுங்கானா மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. ஜூலை 1-ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்களை அனைத்து வகையிலும் முழு ஆயத்தத்துடன் தொடங்க  அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடு, கர்நாடகாக, மகாராஷ்டிரா உள்ளிட்ட அநேக மாநிலங்களில் கொரோனா தொற்று தினசரி வளர்ச்சி விகிதம்   (-) மைனஸ் ஆக உள்ளது. தேசிய அளவில் தொற்று வளர்ச்சி (-) 5.05 வளர்ச்சியாக உள்ளது. 



கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக உரிய ஆய்வுக்குப்பின் முடிவுகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மாநில அரசின் தலைமைச் செயலர்களுக்கு  எழுதிய கடிதத்தில், "தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், பரிசோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொய்வின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று தெரிவித்தார். 


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலின் இரண்டாம்  நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன் சேர்த்துள்ளது. 144 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் டெஸ்ட் உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி இதுவாகும். 


விராட் கோஹ்லி - 44 (124),ரஹானே - 29 (79)