WTC 2021 LIVE : விராட் கோஹ்லி - ரஹானே 50 ரன் பார்ட்னர்ஷிப் 146/3
World Test Championship Final 2021, Ind vs NZ: 144 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் டெஸ்ட் உலகக்கோப்பை சாம்பியன்ஷிப்!
LIVE

Background
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழையால் கைவிடப்பட்ட நிலையில், இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இன்று நல்ல வானிலை நிலவுகிறது. அதனால் இன்று 2வது நாள் ஆட்டம் திட்டமிட்டபடி தொடங்கவுள்ளது.
பைனலில் நீயா, நானா என வரிந்து கட்டுகின்றன இந்தியாவும் நியூசிலாந்தும். ஒருபக்கம் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இன்னொரு பக்கம் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி. ஆக்ரோஷமாக களத்தில் செயல்படக்கூடியவர் விராட் கோஹ்லி, அதே நேரம் கூலாக அணியை வழி நடத்துபவர் கேன் வில்லியம்சன். அதனால் இந்த இவருக்கும் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஃபையர் vs கூல் என வர்ணிக்கலாம்.
மோசமான வெளிச்சம் - இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவு!
146/3 என்ற நிலையில் இந்திய அணி விளையாடி கொண்டிருந்த போது வெளிச்சமின்மை காரணமாக போட்டி தடைபட்டது. அதன் பின்பும் போட்டியை துவங்க முடியாத நிலை நீடித்ததால், 2வது நாள் ஆட்டம் நிறைவடைந்தது. 64.4 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் கேப்டன் விராட், துணை கேப்டன் ரஹானே ஆகியோர் களத்தில் உள்ளனர்.
விராட் கோஹ்லி - 44 (124)
ரஹானே - 29 (79)
146/3 மீண்டும் 3வது முறையாக போட்டி நிறுத்தம்!
மீண்டும் மைதானத்தில் குறைந்த வெளிச்சம் நிலவுவதால் நடுவர்கள் போட்டியை நிறுத்தினர். இன்று இது போன்று போட்டி நிறுத்தப்படுவது 3வது முறையாகும். ஏமாற்றத்துடன் மீண்டும் ட்ரெஸ்ஸிங் ரூம் சென்றார் விராட் கோஹ்லி.
விராட் கோஹ்லி - 44 (124)
ரஹானே - 29 (79)
140/3 விராட் - ரஹானே ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்!
88/3 என்று இந்திய அணி திணறிக்கொண்டிருந்த நிலையில், 4வது விக்கெட்டுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே 50 ரன்கள் சேர்த்து 140/3 என விளையாடி வருகின்றனர்.
விராட் கோஹ்லி - 40 (113)
ரஹானே - 28 (70)
பார்ட்னர்ஷிப் - 52 (128)
வெளிச்சமின்மையால் தடைபட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கியது - 134/3
மைதானத்தில் வெளிச்சம் குறைவாக காணப்பட்டதால் நிறுத்தப்பட்ட போட்டி, 25 நிமிட இடைவெளிக்கு பின்பு மீண்டும் துவங்கியது.
சவுதாம்ப்டனில் நிலவும் இருண்ட வானிலை!
We've had another interruption due to bad light.#WTC21 pic.twitter.com/G7oBvEx8uY
— BCCI (@BCCI) June 19, 2021
போதிய வெளிச்சமின்மை - 2வது முறையாக இன்று தடைபடும் ஆட்டம்!
மூடிய வானிலை காரணமாக வெளிச்சம் குறைந்து காணப்படும் சவுதாம்ப்டன் மைதானம். 58.4 ஓவர் வீசப்பட்டிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்த நடுவர்கள் முடிவு. 134/3 ரன்கள் எடுத்து இந்திய அணி சரிவிலிருந்து மீண்டு வருகிறது.
விராட் கோஹ்லி - 40 (105)
ரஹானே - 22 (62)
4வது விக்கெட் பார்ட்னர்ஷிப் - 46 (111)
Day 2 தேநீர் இடைவெளி 120/3
மைதானத்தில் குறைந்த வெளிச்சம் - முன்கூட்டியே எடுக்கப்பட்ட தேநீர் இடைவெளி. 55.3 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களை சேர்த்துள்ளது.
விராட் கோஹ்லி - 35 (94)
ரஹானே - 13 (54)
3 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை கடந்த இந்திய அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் இன்னிங்ஸில் 47வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை கடந்த இந்திய அணி!
விராட் கோஹ்லி - 24 (73)
ரஹானே - 6 (25)
2.24 டிகிரி ஸ்விங் ஆகும் பந்துகள் - நியூசிலாந்து அபாரம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் நியூசிலாந்து அணி!
New Zealand are averaging 2.24 degrees of swing in this innings. That's the most they have recorded in any Test innings since records began in 2006. #WTCFinal
— The CricViz Analyst (@cricvizanalyst) June 19, 2021
நியூசிலாந்து வீசும் பந்துகள் சராசரியாக 2.24 டிகிரி ஸ்விங் ஆகின்றான். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை கணக்கிடப்பட்டதில் இது அதிகபட்ச ஸ்விங் ஆகும்.
88/3 திணறும் இந்திய அணி - 3வது விக்கெட்டை இழந்தது!
இந்தியாவின் நவீன Wall என அழைக்கப்படும் புஜாரா ஆட்டமிழந்தார். போல்ட் பந்துவீச்சில் அட்டமிழந்த புஜாரா 52 பந்துகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே சேர்த்து நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறி வந்தார். இந்நிலையில் 88 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து இந்திய அணி தடுமாற்றம்.
கடைசி 10 ஓவர்களில் வெறும் 12 ரன் - 81/2
நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பான லைன் & லெங்த்தில் பந்து வீசி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் ஏற்படுத்தி வருகின்றனர். உணவு இடைவெளிக்கு பின்பு வீசப்பட்ட 10 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே இந்திய அணி சேர்த்துள்ளது.
38 ஓவர்கள் முடிவில் - 81/2
விராட் கோஹ்லி - 10 (44)
புஜாரா - 8 (52)
Day 2 உணவு இடைவெளி - 69/2
முதல் செஷன் ஆட்டத்தில் 2 விக்கெட்களை இந்திய அணி இழந்துள்ள நிலையில், கேப்டன் விராட் கோஹ்லி, புஜாரா ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர்.
விராட் கோஹ்லி - 6 (12)
புஜாரா - 0 (24)
2வது விக்கெட்டை இழந்த இந்திய அணி - 63/2
வந்த ஓவரிலேயே விக்கெட்டை தூக்கிய வாக்னர். இந்தியாவின் மற்றொரு துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில் - 28 (64)
முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி - 62/1
கைல் ஜெமீசன் வீசிய பந்தில் சவுதியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்த ரோஹித் சர்மா!
ரோஹித் சர்மா - 34 (68)
விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடந்த இந்திய அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி - 18 ஓவரில் 53/0
ரோஹித் சர்மா - 29 (62)
சுப்மன் கில் - 25 (48)
இந்திய அணி சிறப்பான தொடக்கம் - 49/0
சில டைட் ஓவர்களை நியூசிலாந்து வீசிய நிலையிலும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள்!
16 ஓவர்கள் முடிவில்!
ரோஹித் சர்மா - 25 (56)
சுப்மன் கில் - 23 (41)
10 ஓவர்கள் முடிவில் - 37/0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கியுள்ள இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள்!
ரோஹித் சர்மா - 21 (38)
சுப்மன் கில் - 15 (22)
5 ஓவர்கள் முடிவில் - 12/0
இந்திய அணி நிதான பேட்டிங்!
ரோஹித் சர்மா - 7 (20)
சுப்மன் கில் - 4 (13)
முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன்!
நாங்கள் முதலில் பந்து வீசுவோம். தற்போதைய சூழல், வானிலை பந்துவீச்சுக்கு சாதகமாக நிலவுகிறது, அதை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். குளிர்ந்த வானிலை நிலவுவதால் விக்கெட் சீராக இருக்கும். நான்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறோம், சுழற்பந்து வீச்சாளர் இல்லை. உலகின் சிறந்த அணிக்கு எதிரான சிறந்த சந்தர்ப்பம் மற்றும் மிக பெரிய சவால் இந்த போட்டி. முதல் முறையாக WTC இறுதி போட்டி நடைபெறுவதால் அனைவரும் மிகவும் உற்சாகமாக உள்ளனர். வாட்லிங் மிக சிறந்த வீரர் (இது அவரின் கடைசி போட்டி)
இந்தியா பேட்டிங் - முதல் பந்தை எதிர்கொள்ளும் ரோஹித் சர்மா!
முதல் ஓவரை நியூசிலாந்து பந்துவீச்சாளர் சவுதி வீச - ரோஹித் சர்மா எதிர்கொள்கிறார்!
தேசிய கீதம் இசைக்க - தொடங்கியது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்!
இருநாட்டு தேசிய கீதங்களும் இசைக்க, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தொடங்கியது!
விராட் கோஹ்லி - முதலில் பந்துவீச விரும்பினோம்!
டாஸ் வெற்றி பெற்று இருந்தால் நாங்களும் முதலில் பந்து வீசியிருப்போம். ஆனால் இது போன்ற பெரிய பைனலில் முதலில் ரன்கள் ஸ்கோர் செய்வதும் நல்ல விஷயம் தான். இந்திய அணியை பொறுத்தவரை எப்படி பட்ட சூழலில் விளையாடும் வீரர்களை கொண்டிருக்கிறது, அதனால் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட முடிந்தது. எங்களைப் பொறுத்தவரை இது ஒரு டெஸ்ட் போட்டி, எப்போதும் போல் சிறப்பாக விளையாட வேண்டும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - நியூசிலாந்து அணியின் Playing 11
கேன் வில்லியம்சன் ( கேப்டன் ), டேவான் கான்வே, டாம் லாதம், ராஸ் டைலர், ஹென்றி நிக்கோலஸ், வாட்லிங், கொலின் டி கிராண்ட்ஹோம், கைல் ஜெமிசன், டிம் சவுதி, ட்ரெண்ட் போல்ட், வாக்னர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - இந்திய அணியின் Playing 11
விராட் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா.
நியூசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி!