*தமிழகத்தில்  5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேற்று பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். இதில், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் முதன்மை செயலாளராக  பொறுப்பை வகித்து வந்த கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்,  பணியிடம் மாற்றப்பட்டு தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  மேலும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவரான ஷிவ்தாஸ் மேனன் ஐ.ஏ.எஸ்., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறையின் கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 


*காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.


*இந்தாண்டின் தென்மேற்கு பருவமழை கேரளாவில்  மே 31 வாக்கில் முன்கூட்டியே தொடங்க வாய்ப்புகள் உள்ளதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.   மாலத்தீவு-கமோரின் பகுதி,   தென்மேற்கு மற்றும் கிழக்கு மத்திய வங்காள விரிகுடா, தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவின் சில பகுதிகளில் நேற்று காலை தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.   


*கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துமாறும்,உள்ளூர் நிலைமையை ஆய்வு செய்த பின்னர் படிப்படியாக தளர்வுகளை அனுமதிக்குமாறும் மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


 


 


*செங்கல்பட்டு அருகே திருமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான  HLL Biotech Ltd ( HBL) - ஒருங்கிணைந்த தடுப்பூசி மைய நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசே குத்தகை அடிப்படையில் ஏற்று நடத்தி, அதன் வாயிலாக தடுப்பூசியினை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வழிவகை செய்ய வேண்டுமென வலியுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் பியுஷ் கோயலை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி. ஆர். பாலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் புது தில்லியில் சந்தித்துப் பேசினர்.   


*கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவலின் வேகம் குறையவில்லை.  கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொள்வது தொடர்பாக, இந்த 6 மாவட்ட அதிகாரிகளிடம் காணொலி வாயிலாக  முதல்வர் ஆலோசனை நடத்தினார். 


 



கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் - மத்திய அரசு  


 


*கருப்பு பூஞ்சை(மியூகோர்மைகோசிஸ்) தொற்றுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்தின் 80,000 குப்பிகள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் டி வி சதானந்த கவுடா அறிவித்துள்ளார்.




 


*தேசிய குணமடைவோர் வீதம் 90.01 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,46,33,951பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்,  2,83,135 குணமடைந்தனர். அதே சமயம்,  2.18 லட்சம் பேருக்கு  கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 24,19,907-ஆக குறைந்துள்ளது. 


*நாட்டில் இதுவரை வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களின் எண்ணிக்கை 20.54 கோடியை (20,54,51,902) கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18 முதல் 44 வயதுடைய 11,76,300 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். 




 


*தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,58,752 கொரோனா தடுப்பு மருந்து டோஸ்கள் போடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 18 முதல் 44 வயது வரை உள்ள மக்களில், 16 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.