தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத
Breaking News: பஞ்சாப் தேர்தலை பாட்டியாலாவில் நின்று சந்திக்கிறார் அமரீந்தர் சிங்..
Breaking News Live in Tamil: தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியல், கிரைம் மற்றும் பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.
பஞ்சாப் தேர்தலை பாட்டியாலாவில் நின்று சந்திக்கிறார் அமரீந்தர் சிங். ”பாட்டியாலா எங்களுடன் 400 வருடங்களாக துணை நிற்கிறது. அதை சித்துவுக்கு விட்டுக்கொடுக்கப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்
மக்கள் பிரச்சனைகளில், முதலில் களத்துக்கு வரவேண்டும், இதுதான் யுக்தி - விஜய் மக்கள் இயக்க நிர்வாகி பேச்சு
போராடி உயிர்நீத்த விவசாயிகளுக்கு மெளன அஞ்சலி - அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது
வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்ய தமிழ்நாடு வந்தது உள்துறை இணைச்செயலாளர் தலைமையிலான குழு
புதுக்கோட்டையில் படுகொலை செய்யப்பட்ட திருச்சி நாவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். அதிமுக ஆட்சியை விட தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் தான் அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண்சட்டங்கள் ரத்து மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், உயிர்த்தாகம் செய்த விவசாயிகளுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் எனவும் திமுக மக்களவை மாநிலங்களை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
'கீரனூர் அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கயவர்களால் நேற்று இரவு வெட்டிக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலையில்தான் காவல்துறையினர் பணியாற்றுகிறார்கள்' என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்
50 ஆயிரம் இடங்களில் தமிழ்நாடு முழுவதும் இன்று 10-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி, காலஅவகாசம் முடிந்தும் 71 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சிறப்பு மெகா முகாமைப் பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முகாமில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை விடப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணியினரின் கோரிக்கைத் தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எடுக்க உள்ள நடவடிக்கைகள்
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் இன்றும் நாளையும் பார்வையிடவுள்ளனர்.
கோவாவில் நேற்று நடைபெற்ற 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஹங்கேரிய இயக்குநர் இஸ்த்வான் ஸாபோவிற்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திரைத்துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பணிக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதன் நிலவரத்தை அறிய, கோவின் இணையதளத்தில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
இது ஒருவர் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ளாரா என்பதை எளிதில் சரிபார்க்க உதவும். டிராவல் ஏஜென்சிகள், அலுவலகங்கள், ஊழியர்கள், பொழுதுபோக்கு நிறுவனங்கள், ஐஆர்சிடிசி, அரசு அலுவலகங்கள் போன்றவை இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
திருப்பூரில் தேச தந்தை காந்தியாரினை கொலை செய்த நாதுராம் கோட்சே க்கு வீரவணக்க நாள் கொண்டாடிய சிவசேனா நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு!!
பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, நேற்று வீட்டு வசதி தினம் கொண்டாடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டுக்குள் 2.95 கோடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை 1.63 கோடி வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2021-22ம் நிதியாண்டில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்ளுக்கு வழங்கப்பட்ட மொத்த தொகை ரூ.7,775.63 கோடி. திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.1,47,218.31 கோடி வழங்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை அணி ஐபிஎல் 2021 கோப்பையை வென்றதற்காக பாராட்டு விழா, கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கோப்பையை சென்னை அணி வென்றதற்காக, சி எஸ் கே கேப்டன் தோனிக்கு, முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
Background
Tamil Nadu Latest News Live Updates:
இபிஎஃப் அமைப்பின் தற்காலிக ஊதிய தரவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 15. 41 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட, செப்டம்பரில் 1.81 லட்சம் பேர் கூடுதலாக இணைந்துள்ளனர்.
இந்த 15.41 லட்சம் பேரில், சுமார் 8.95 லட்சம் பேர் முதல் முறையாக சேர்ந்த புதிய உறுப்பினர்கள். சுமார் 6.46 லட்சம் பேர், வேலைகள் மாறியதால் வெளியேறி மீண்டும் இணைந்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -