Breaking News Live: இந்தி மொழியில் ட்வீட் செய்த பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான்
தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.
ரோமில், ஜி20 தலைவர்களின் 16வது உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பின்னர், ஜி 20 உறுப்பு நாட்டுத் தலைவர்களுடன் சந்தித்து பேசினார். இந்நிலையில், ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் பிரதமர் மோடிக்கு இந்தி மொழியில் ட்வீட் செய்தார். அதற்கு மதிபளிக்கும் விதமாக, பிரதமர் மோடியும் பிரென்ச் மொழியில் மேக்ரானுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
Background
தீபாவளி அன்று இறைச்சி கடை திறக்க அனுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு வரும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதேநாளில் மகாவீர் ஜெயந்தி நாளும் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தி நாளன்று இறைச்சி கடைகள் மூடப்படக்கூடிய நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் சூழலில், பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து தீபாவளி நாளன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதேவேளையில் ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சி கடைகளும், ஜெயின் மத வழிபாட்டுத் தளங்களைச் சுற்றியுள்ள இறைச்சி கடைகள் மூடப்படும்.”
- - - - - - - - - Advertisement - - - - - - - - -