Breaking Live: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...
ஓமைக்ரான் வைரஸ் பரவலால் 12 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்
தென்னாப்பரிக்கா, பிரேசில், சிங்கப்பூர், ஹாங்காங். சீனா, நியூசிலாந்து, இஸ்ரேல், மொரிஷியஸ், போட்ஸ்வானா, இங்கிலாந்து, வங்க தேசம், ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு ஆர்.டி.பி.ஆர். சோதனை கட்டாயம்
சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. ஆக விஜயகுமார் நியமனம்
சென்னை காவலர் பயிற்சி கல்லூரி முதல்வராக மணிவண்ணன் நியமனம்
சென்னை புளியந்தோப்பு காவல் துணை ஆணையராக ஈஸ்வரன் நியமனம்
மதுரை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக ஆறுமுகசாமி நியமனம்
கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களை தடை செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை
கிரிப்டோகரன்சி தொடர்பான மசோதா விரைவில் அறிமுகப்படுத்தப்படும்
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12 எம்.பிக்களின் சஸ்பென்ட் நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது என மாநிலங்களவை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கடந்த கூட்டத் தொடரின் கடைசி நாளில் அவை நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 12 எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யக் கோரும் மசோதாவை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி நேற்று தாக்கல் செய்தார்.
குரல் வாக்கு மூலம் இம்மசோதா நிறைவேற்றப்பட்டு, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆறு பேரையும், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளிலிருந்து தலா இரண்டு பேரையும், சிபிஐ சிபிஎம் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவரையும், சஸ்பெண்ட் செய்வதற்கான உத்தரவை அவைத் துணைத்தலைவர் ஹரிவன்ஸ் பிறப்பித்தார். நடப்பு கூட்டத் தொடரில், முந்தையக் கூட்டத்தொடர் அடிப்படையில் உறுப்பினர்கள் சஸ்பென்ட் செய்யப்படுவது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
இதையொட்டி, அவைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்த காங்கிரஸ் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, 12 எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
காய்கறிகளுக்கு விலை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கைவிட்டுள்ளார்.
காய்கறிகளுக்கு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து, அவற்றை கொள்முதல் செய்து மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதை கேரள அரசு சாத்தியமாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காலத்தில் தோட்டக்கலைத்துறை உழவர்களிடமிருந்து காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்முதல் செய்து மக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்தது. அந்த அனுபவத்தின் உதவியுடன் தோட்டக்கலைத் துறையால் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும்.
இத்தகையத் திட்டம் தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்படும் போது, சந்தையில் விற்கப்படுவதை விட ஐந்தில் ஒரு மடங்கு தொகை மட்டுமே உழவர்களுக்கு கொள்முதல் விலையாக வழங்கப்படும் நிலை மாறும். ஒவ்வொரு காய்கறிக்கும் உறுதி செய்யப்பட்ட விலை கிடைப்பதால், அதிகம் விளையும் போது போதிய விலை கிடைக்காமல் காய்கறிகளை குப்பையில் கொட்டும் நிலையும், அறுவடை செய்யாமல் செடிகளிலேயே வாட விடும் நிலையும் மாறும். எனவே, தமிழ்நாட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு கொள்முதல் விலை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் இதுவரை யாருக்கும் உருமாறிய ஓமைக்ரான் கோவிட் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவர்கள் அரசின் கல்வி உதவித்தொகையை பெற பெற்றோர்களின் வருமான வரம்பு 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நாளை காலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை முதல் மழைப் பொழிவு குறையத் தொடங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்
முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டம் 142 அடியைத் தொட்டது. அணையில்142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ளலாம் , பேபி அணையை பலப்படுத்தி விட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற 2014 உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு நான்காவது முறையாக முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டம் 142 அடியைத் தொட்டது
தமிழக-கேரள இரு மாநில எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் நீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது முல்லை பெரியாறு அணை. முல்லை பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 155 அடி ஆகும் .
அம்மா மினி கிளினிக்கை மூடக் கூடாது என்றும், அங்கு பணிபுரியும் மருத்துவர்களை நிறுத்தும் போக்கை மாநில அரசு கைவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்
குமரி அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒருசில இடங்களில் வரும் 3-ஆம் தேதி வரை மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
ராணுவ நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ராணுவ நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை எட்டு வாரத்திற்குள் அகற்றி நிலத்தை ஒப்படைக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டுள்ளது
அக்டோபர் 31, 2021 நிலவரப்படி, வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் 2,17,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன மற்றும் 1.83 கோடி பயணிகள் பயனடைந்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை 1576213 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களில் 670368 பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். 905845 பேர் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். உள்நாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கை கொவிட்டுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தவாறு தற்போது இயக்கப்படுகின்றன என விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் போதிய வருமானம் இல்லாத 13,000 திருக்கோவில்களில் ஒருகால பூஜை நடத்துவதற்கு ஏதுவாக 129 கோடி ரூபாய் வைப்பு நிதிக்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
Background
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிச.2ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். மேலும் வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -