Breaking News LIVE: சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயம்...அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 41 சிலைகடத்தல் வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பத்திரிகையாளருமான சந்தன் மித்ராவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது அறிவாற்றல் மற்றும் நுண்ணறிவு செயல்பாடுகள் மூலம் அவர் என்றும் நம் நினைவில் இருப்பார் என்று பிரதமர் கூறியுள்ளார்.
பொறியியல் படிப்பிற்க்கான கலந்தாய்வு வரும் 17-ம் தேதி தொடங்குகிறது; தரவரிசை பட்டியல் 14-ம் தேதி வெளியாகும்.
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசு தரப்பில் கூடுதல் விசாரணைக்கு கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய விசாரணையின் போது, சயான், மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
தடவியல் நிபுணர் மற்றும் கோத்தகிரி மின்வாரிய பொறியாளர், கோடநாடு பங்களா மேலாளர் நடராஜன் ஆகியோரை விசாரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவர்கள் புதிதாக விசாரணைக்கு ஆஜர்படுத்தப்படும் மூன்று நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர்கள் தற்போது விசாரணைக்கு வரவில்லை.
கூடுதல் விசாரணைக்கு தடை கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், கூடுதல் விசாரணைக்கு அனுமதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சயனிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க கோரி, சயன் தரப்பில் முறையிட வாய்ப்புள்ளது.
முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயான் சற்றுமுன் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட மனோஜ் நீதிமன்றத்திற்கு பலத்த போலிஸ் பாதுகாப்புடன் குன்னூர் கிளை சிறையில் இருந்து வழக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.
தடவியல் நிபுணர், கோத்தகிரி மின்வாரிய உதவி பொறியாளர், கோடநாடு மேலாளர் நடராஜன் ஆகியோர் இன்று விசாரணைக்கு வரவில்லை. காவல் துறையினர் சம்மன் அனுப்பாததால் விசாரணைக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் இன்று 535 மையங்களில் 51,910 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானி உயிரிழந்ததை அடுத்து, ஸ்ரீநகரில் உள்ள 'லால் சவுக்' பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இன்று வட தமிழக கடற்கரையில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
1. டோசிலிசுமாப்
2. மெத்தைல் பிரெடினிசோலோன்
3. எனாக்சோபிரின்
4. டெக்சாமெதாசோன்
5. ரெம்டெசிவிர்
6. அம்போடெரிசின் பி டிஆக்சிகோலேட்
7. போசாகோனசோல்
8. இன்ட்ராவெனஸ் இம்யூனோகுளோபிளின் (ஐவிஐஜி)
உள்ளிட்ட எட்டு அத்தியாவசிய மருந்துகளின் விநியோகம் மற்றும் இருப்பு குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மற்றும் ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் மன்சுக் மண்டாவியா இன்று ஆய்வு மேற்கொண்டார்
காஷ்மீர் ஹரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானி உயிரிழந்தார்.
இறுதி ஊர்வலம் பெரும்பாலானோர் கலந்து கொள்ள கூடும் என்பதால், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும், இணைய சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கட்டுப்பாடுகளை பாதுக்காப்புப் படையினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரது விருப்பப்படி, ஸ்ரீநகரில் உள்ள தியாகிகள் கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கு அரசு நிர்வாக அனுமதி கொடுக்குமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இறுதிச் சடங்குகள் குறித்த அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படுகிறது.
Background
Latest News in Tamil Today LIVE Updates:
கொரோனா நிலவரம் குறித்து தமிழகம் மற்றும் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்களிடம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொலைபேசி உரையாடல் மூலம் ஆய்வு மேற்கொண்டார். கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, அதன் எல்லையில் உள்ள தமிழகம் மற்றும் கர்நாடகாவில் கொவிட்-19 மேலாண்மை தொடர்பான விஷயங்கள் குறித்து அவர் ஆலோசித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -