தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது இந்திய சாதனை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்களில் ஒரேநாளில் 28.20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்த நிலையில் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 


நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. நீட் தேர்வு அச்சம் காரணமாக மேட்டூர் மாணவன் தனுஷ் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


எதிர்க்கட்சி-ஆளுங்கட்சி என எந்த வரிசையில் இருந்தாலும் நீட் ஒழிப்புக்காக போராடி வருவது தி.மு.கழகம்.நீட் கருத்து கேட்புக்கு ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது, அதன்படிநீட் விலக்கு மசோதா இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. நீட் இல்லா நிலையை ஏற்படுத்துவோம் என திமுக தெரிவித்துள்ளது. 


 



அச்சம்விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று?  ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே,அதை எப்போது செயல்படுத்துவீர்கள்? என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.  


NEET Reslolution in TN Legislative Assembly 


நீட் தேர்வு அச்சத்தால் தம்பி தனுஷ் தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட துயரம் தாளவியலாத கொடுமை. ஏற்கனவே இருமுறை தேர்ச்சிப் பெற்றும் மருத்துவம் பயில இடம் கிட்டவில்லை. இம்முறையும் இடம் கிடைக்காமற்போனால் என்ன செய்வதென்று அஞ்சிக் கூடுதல் மனஅழுத்தத்திற்கு ஆளாகி பலியாகியிருக்கிறான். இதற்கு மோடி அரசே பொறுப்பு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.   


குஜராத்தின் புதிய முதலமைச்சராக புபேந்திர படேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.  


கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.


வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒருசில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட தேதியில் இருந்து (அல்லது)  மருத்துவ ரீதியாக கொரோனா பாதிப்பு என மதிப்பிடப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் ஏற்பட்ட உயிரிழப்பு கொரோனா இறப்பாக கருதப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மேலும், வாசிக்க:   


Kozhikode Plane Crash | கோழிக்கோடு விமான விபத்திற்கு காரணம் இதுவா? அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியீடு..