தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, மாநிலத்தில் புதியதாக 10 பேருந்து நிலையங்களை கட்ட ரூ.115 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்களை கட்டுவதற்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ரூ.26 கோடி செலவிலும், ஓசூரில் ரூ.30 கோடி செலவிலும் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்பட உள்ளன. இதேபோன்று, அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்ச்சல் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து நிலையம் கட்டவும், தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.


நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திருப்பூர் மற்றும் ஓசூர் மாநகராட்சிகளில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படவுள்ளது. கூடலூர் (டி), அரியலூர், வடலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, கொளச்சல் மற்றும் பொள்ளாச்சி பேரூராட்சிகளுக்கு பணிகளுக்கான நிர்வாக அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 2022-2023 பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இந்த புதிய பேருந்துகள் அமைக்க பல்வேறு திட்டங்களில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கான கருத்துருவை, நகராட்சி நிர்வாக இயக்குனர் அரசுக்கு அனுப்பி வைத்தார்.