1.மும்பை நகரை புரட்டிப்போட்ட டவ் - தே புயல், குஜராத்தின் போர்பந்தர் - மாகுவா இடையே கரையை கடந்தது. மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடக ஆகிய மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய புயலால் 14 பேர் உயிரிழந்தனர்.
2. கரிசல் காட்டு மண்ணை, மனிதர்களை, அவர்தம் வாழ்வியலை தன் எழுத்துக்கள் மூலம் இலக்கியத்தில் பதிவு செய்த முன்னோடி, தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ரா என்னும் கி.ராஜநாராயணன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 99. புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு அவருக்கு இறுதி சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
3.மதுரை, திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
4.கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என ஆந்திர அரசு அறிவிப்பு.
5.உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16.42 கோடியாக அதிகரித்துள்ளது.
6.இந்தியாவின் அட்லைனுக்கு 4ஆவது இடம்; மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மகுடம் சூடினார் மெக்சிகோ அழகி.
7,சென்னையில் கொரோனா பாதிப்பு 5 நாள்களாக குறைந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல்.
8. கேரள முதல்வராக பினராயி விஜயன் வரும் 20ஆம் தேதி பதவியேற்கிறார்.
9.கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 75 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 150 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 31 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 335 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 18 ஆயிரத்து 5 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 20 ஆயிரத்து 486 நபர்கள் கொரோனா வைரசில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
11. தனியார் மருத்துவமனைகளுக்கு இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து நேரடி விநியோகம் செய்யப்பட உள்ளது. சென்னை, திருச்சி, சேலம், நெல்லை, மதுரை, கோவை மாவட்டங்களில் நடைபெற்று வந்த ரெம்டெசிவர் விற்பனை நிறுத்தம்.
இது போன்ற முக்கியச்செய்திகளை எளிதில் அறிந்து கொள்ள ABP நாடு இணையதள பக்கமான www.abpnadu.comஎன்ற இணையதளத்துடன் இணைந்திருங்கள்.