Swiggy Platform Fee : ஸ்விக்கியில் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் ஒவ்வொரு ஆர்டருக்கு கட்டணத்தை வசூலிப்பதாக ஸ்விக்கி நிறுவனம் அறிவித்துள்ளது.
பொருளாதார மந்தநிலை
உலக நாடுகளில் எதிர்வரும் நாட்களில் பொருளாதார மந்த நிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார ஆய்வறிஞர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பெருநிறுவனங்கள் பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகின்றனர். இதனால் பல்வேறு பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
குறிப்பாக ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட அனைத்து முன்னணி உணவு விநியோக நிறுவனங்களும், பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகின்றனர். அதன்படி, ஸ்விக்கி நிறுவனத்தில் நஷ்ட அளவு கடந்த நிதியாண்டில் 1,617 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 3,629 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதே போன்று நடப்பு நிதியாண்டின் செலவுகளும் 131 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதனால் சுமார் 3000க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஸ்விக்கி பணிநீக்கம் செய்துள்ளது.
புதிய கட்டணம்
இந்நிலையில், தற்போது, வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் ஒவ்வொரு ஆர்டருக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு ஆன்லைன் ஆர்டரில் எத்தனை உணவை ஆர்டர் செய்திருந்தாலும் சரி, எவ்வளவு தொகைக்கு ஆர்டர் செய்திருந்தாலும் சரி, கட்டாயம் ரூ.2 வாடிக்கையாளரிடம் ஸ்விக்கி நிறுவனத்தால் வசூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிளாட்ஃபார்ம் கட்டணம் (Platform Fee) ஆனது உணவு விநியோக வணிகத்தில் பாதிக்கப்பட்ட வருவாயை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும் ஸ்விக்கி இந்த புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. ஆனால் ஸ்விக்கிக்கு போட்டியாக இருக்கும் சோமேட்டோ இதுவரை எந்த வித கட்டணத்தை அமல்படுத்தவில்லை. ஆனால் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை அமல்படுத்திய முதல் நிறுவனமாக ஸ்விக்கி இருக்கிறது.
1.5 மில்லியனுக்கு அதிகமான ஆர்டர்கள்
மேலும், இந்த பிளாட்ஃபார்ம் கட்டணம் (Platform Fee) தற்போது பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் நீட்டிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பிளாட்ஃபார்ம் 2 ரூபாய் என்று சிறியதாக இருந்தாலும், ஸ்விக்கியில் தினசரி 1.5 மில்லியனுக்கு அதிகமான ஆர்டர்களை நிறுவனம் வழங்கும் நிலையில், இந்த 2 ரூபாய் கட்டணம் இந்நிறுவனத்திற்கு பெரிய தொகையான பார்க்கப்படுகிறது. இதனால் இழந்த வருவாயை மீட்கக்கூடிய வழியை ஸ்விக்கி நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இந்த பிளாட்ஃபார்ம் கட்டணம் வசூலிக்கப்படுவது (Platform Fee) ஸ்விக்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க