பயனாளர்கள் ஆர்டர் செய்யும் உணவுகளை டெலிவரி செய்யும் நிறுவனமாக செயல்படுகிறது ஸ்விகி. ஆரம்பத்தில் சில பயனானர்பளை மட்டுமே வைத்திந்த இந்நிறுவனம், இன்று பல லட்சம் பயணாளிகளுக்கு உணவு விநியோகம் செய்து வருகிறது.


இவர்களின் இன்னொரு செயலியான ஸ்விகி இன்ஸ்டா மார்ட், மளிகைப் பொருட்களையும் வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று டெலிவரி செய்து வருகிறது. இந்நிலையில், ஸ்விகி நிறுவனம் இந்த ஆண்டில் இந்திய வாடிக்கையாளர்கள் ஸ்விகியில் அதிகம் வாங்கிய உணவுப் பொருட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 


ஸ்விகியின் பட்டியல்:


இந்தியர்கள் ஸ்விகியில் அதிகம் வாங்கிய உணவுப் பொருட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், அதிக விலைக்கு பொருட்கள் வாங்கியவர்கள் எங்கெங்கு இருக்கின்றனர் என்ற பட்டியலும் சேர்க்கப்பட்டுள்ளது. அதில், பெங்களூருவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், தீபாவளி சமயத்தில் ஒரே 75 ஆயிரம் வரை மளிகைப் பொருட்களை இன்ஸ்டாமார்ட்டில் வாங்கியுள்ளார். அதே ஊரைச் சேர்ந்த இன்னொரு வாடிக்கையாளர், இந்த வருடத்தில் மட்டும் 16 லட்சத்திற்கும் மேல் மளிகைப் பொருட்களை வாங்கியுள்ளார். ஒரே ஆண்டில் ரூபாய் 16 லட்சத்திற்கும் அதிகமாக ஸ்விகி மூலமாக மளிகை பொருட்களை ஒருவர் வாங்கியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 




பட்டியலில் இடம் பெற்ற உணவுப் பொருட்கள்


உணவுப் பிரியர்களின் ஃபேரட் உணவுப் பொருளான பிரியாணி, ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை ஆர்டர் செய்யப்படுகிறது என்ற தகவலையும், ஸ்விகி தனது பட்டியலில் இணைத்துள்ளது. இதனால், அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவுப் பொருட்களின் பட்டியலில், பிரியாணி முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவதாக, தமிழகத்துக்கே உரிய மசாலா தோசை இடம் பெற்றுள்ளது. அடுத்தடுத்த இடங்களில், சிக்கன் ஃப்ரைட் ரைஸ், பன்னீர் பட்டர் மசால உள்ளிட்ட சுவையான உணவு வகைகள் டாப் லிஸ்டில் உள்ளன. புனேவைச் சேர்ந்த ஒரு நபர், சுமார் 71 ஆயிரம் ரூபாய்க்கு, பர்கர் ஆர்டர் செய்து தனது பணியாளர்களுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். 


சிற்றுண்டிகளில் எது முதலிடம்?


இந்தியர்கள் அதிகம் விரும்பி சாப்படும் சிற்றுண்டிகளின்(snacks) பட்டியலில், சமோசா, பாப்கார்ன், ஃப்ரன்ச் ஃப்ரைஸ், ஹாட் விங்க்ஸ் மற்றும் டாக்கோஸ் ஆகியவை அதிகம் முறை ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இனிப்பு வகைகளில், 


குலாப் ஜாமூன், ரசமில்லாய், சாக்கோ லாவா கேக், ரசகுல்லா மற்றும் சாக்கோ சிப்ஸ் ஐஸ்க்ரீம் உள்ளிட்டவை டாப் கேட்டகிரியாக இடம் பெற்றிள்ளன. 


உடல் நலனின் மேல் அதிக அக்கறை கொண்ட இந்தியர்கள்


ஸ்விகியின் பட்டியலில், இந்த வருடத்தில் இந்தியர்கள் தங்களின் உடல் நலனின் மேல் அதிக அக்கரைக் கொண்டு, ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகளை ஆர்டர் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய பகுதிகளில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. ட்ராகன் பழம் மற்றும் வுட் லாவ் மற்றும் பெர்ரிப் பழங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பழ வகைகள்,  17 லட்சம் கிலோ அளவிற்கு வாங்கப்பட்டுள்ளது. 


அசைவ உணவுகளில் டாப்பாக சிக்கன்


அசைவப்பிரியர்கள், இந்த வருடமும் சிக்கனையே அதிகமாக ஸ்விகியில் ஆர்டர் செய்துள்ளனர். கறி உணவு வகைகள்தான் பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. மேற்கூறிய தகவல்கள் மட்டுமன்றி, இன்னும் சில தகவல்களையும் ஸ்விகி வெளியிட்டுள்ளது. அதில், அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் அதிகமாக பகல் நேரங்களில் உணவு ஆர்டர் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.