1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அரசின் 2016 முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை ஜனவரி 2 ஆம் தேதி (இன்று) உச்ச நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.


நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கில் தீர்ப்பை இன்றைய தினம் அறிவிக்க உள்ளது. நீதிபதி எஸ்.ஏ. நசீர் ஜனவரி 4 ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பை வழங்க உள்ளார்.


 இதற்கு முன் உச்ச நீதிமன்றம், டிசம்பர் 7 அன்று, மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அரசாங்கத்தின் 2016 பணமதிப்பிழப்பு முடிவு தொடர்பாக/ தொடர்புடைய தரவுகளை பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது மேலும் அதன் தீர்ப்பை ஒத்திவைத்தது. 


நீதிபதிகள் பி.ஆர்.கவை, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி - ரிசர்வ் வங்கியின் வழக்கறிஞர் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பி.சிதம்பரம் மற்றும் ஷியாம் திவான், மனுதாரர்களின் வழக்கறிஞர்களின் மனுக்களை விசாரித்தது. ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் பரிந்துரையின் பேரில் மட்டுமே எடுக்கப்பட முடியும், சட்டப்பூர்வ டெண்டர் தொடர்பான எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் சொந்தமாகத் தொடங்க முடியாது என்று குறிப்பிட்டார். 


2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மறுபரிசீலனை செய்வதற்கான உச்ச நீதிமன்றத்தின் முயற்சியை எதிர்த்த அரசாங்கம், "கடிகாரத்தை மீண்டும் திருப்பும் முயற்சி” போன்றது என விளக்கமளித்தது. இந்த முடிவை மீண்டும் வாபஸ் பெற முடியாது என குறிப்பிட்டத்தக்கது. ரிசர்வ் வங்கி தனது தரவுகளின்படி, பணமதிப்பிழப்பு அறிவித்த சமயத்தில்  "தற்காலிக கஷ்டங்கள்" இருப்பதாகவும், அவையும் தேசத்தை கட்டியெழுப்பும் செயல்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றும் ஒப்புக்கொண்டது, ஆனால் இந்த  பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காணும் வழிமுறை இருந்தது என குறிப்பிடப்பட்டிருந்தது.  


பிரமாணப் பத்திரத்தில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது "நன்கு பரிசீலிக்கப்பட்ட" முடிவு என்றும், கள்ளப் பணம், பயங்கரவாத நிதி, கருப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு பெரிய மூலோபாயத்தின் ஒரு பகுதி என்றும் மத்திய அரசு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. நவம்பர் 8, 2016 அன்று மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட 58 மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்தது.        


மத்திய ரிசர்வ் வங்கியின் முக்கியச் செயல்பாடுகளில் நாணயப் புழக்க மேலாண்மையும் ஒன்று. நாணய மேலாண்மை என்பது நாட்டில் இருக்கும் பணத்தின் புழக்கம் குறித்த தரவை வைத்திருப்பது. அது தேவையான பணத்தை புழக்கத்தில் விடுவதும் நீக்குவதும் அடங்கும். வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி 2021-22ம் நிதியாண்டில் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


அனைத்து நோட்டுகளிலும் கள்ள நோட்டு அதிகரித்துவிட்டதாகக் கூறும் ரிசர்வ் வங்கி குறிப்பாக 500 ரூபாய் நோட்டுகள்தான் கட்டுக்கடங்காத அளவுக்கு கள்ளநோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாகக் கூறியுள்ளது. அறிக்கையின்படி, 500 ரூபாய் நோட்டுகளில் 101.9 சதவிகித கள்ளநோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளில் 54.16 சதவிகிதம் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் உள்ளன என அறிக்கை குறிப்பிட்டுள்ளது.