உணவு வழங்க தடை கோரி மனு:


கடந்த மார்ச் மாதத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில், தெரு நாய்களுக்கு உணவு வழங்கக்கூடாது என மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தெரு நாய்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். இதனால் நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, தெரு நாய்கள் உணவு பெறுவதற்கு உரிமை பெற்றுள்ளது. அதே நேரம் பொதுமக்களும் தெரு நாய்களுக்கு உணவு வழங்க உரிமை பெற்றுள்ளனர். ஆகையால் தெரு நாய்களுக்கு உணவு வழங்குவதை தடுக்க முடியாது என உத்தரவிட்டது.


மேல் முறையீடு:


டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண், அனிருத்த போஸ் அமர்வில் விசாரணைக்கு சில மாதங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தெரு நாய்களுக்கு உணவளிப்பதால், எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் மக்களுக்கு பாதிப்பும் ஏற்படும் என மனுதாரர் சார்பில் கூறப்பட்டது. அதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் டெல்லி அரசு ஆகியோர் 6 வாரத்திற்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர்.அதுவரையில் தெரு நாய்களுக்கு உணவளிக்க அனுமதி அளித்த டெல்லி நீதிமன்றம் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது.


மீண்டும் விசாரணை:




இந்நிலையில் தெரு நாய்களுக்கு உணவு அளிப்பது தொடர்பான  வழக்கு சில மாதங்களுக்கு பின் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தெரு நாய்களுக்கு உணவளிக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அனுமதியுடன் சில கட்டுப்பாடுகளையும் விதித்தது.


Also Read: Hyderabad Encounter: நாட்டையே பரபரப்பாக்கிய ஹைதராபாத் என்கவுண்டர்.. விசாரணை ஆணைய அறிக்கையில் அதிர்ச்சி..!


கட்டுப்பாடுகளுடன் அனுமதி


தெரு நாய்களுக்கு உணவளிப்பது தொடர்பாக விரிவான வழிகாட்டுகளை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதில்  குறிப்பிட்ட இடங்களில், காலனிகளில் தெருநாய்களுக்கு உணவளிக்க உச்ச நீதிமன்றம் வழிவகுத்தது.


Also Read: ஜிஎஸ்டி தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை கா, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண