உச்சநீதிமன்றத்தில் குஜராத் நீதிமன்றம் ஐ ஜிஎஸ்டி சார்பாக அளித்த தீர்ப்பு மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில் ஜிஎஸ்ட் வரி தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய மாநில அரசுகள் ஆகிய இரண்டிற்கு சம உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


 


இந்நிலையில் இந்தத் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில்,  “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே2021 என்னை GST கவுன்சிலுக்கு நியமித்ததிலிருந்தே இதை நான் கூறிவருகிறேன். இத்தீர்ப்பு அதனை தெளிவுபடுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. GST-இல் முழு மாற்றங்கள் தேவை” எனப் பதிவிட்டுள்ளார்.


 






மேலும் இந்தப் பதிவில் அவர் தன்னுடைய உரையையும் பதிவிட்டுள்ளார். அந்த உரையில், “இவை அனைத்தையும் பார்க்கும் போது, நாம் அரசியலமைப்பு சட்டத்தின்படியும். வரலாற்று ரீதியாகவும் ஓர் விந்தையான இடத்தை நோக்கி நகர்ந்துள்ளோம் - சர்வ வல்லமை படைத்த அனைத்து தளங்களையும் கூர்நோக்கும். ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டம் எதிர்நோக்காத ஒரு GST மன்றம். இம்மன்றத்திற்கு அதன் முக்கிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைப்பு ரீதியாகவும், தொழில்நுட்ப தள அடிப்படையிலும் போதுமான வசதிகள் இல்லை.


இந்த மன்றம் வெறுமென ஓர் அடையாள சடங்காக, முத்திரை குத்த மட்டுமே செயல்படும் போது தான் இந்த வித்தை அபாயகரமாக கொள்கைகளை வகுக்கும் உண்மையான மாறுகிறது. அதிகாரம் (சட்டப்படி) CRICயின் TRU, பலவீனமான GST செயலகம் தோற்றத்தில் மட்டுமே அரசாங்கத்தை பிரதிபலிக்கும் GST பிணையம் போன்ற சில தற்காலிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது” என்பதை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண