✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Electoral Bonds: தேர்தல் பத்திர எண்களை வெளியிட எஸ்பிஐ-க்கு உத்தரவு; மீண்டும் உச்சநீதிமன்றம் அதிரடி

செல்வகுமார்   |  15 Mar 2024 11:51 AM (IST)

Electoral Bonds Number: அரசியல் கட்சிகள் எந்த நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றுள்ளன என்பது தொடர்பான தேர்தல் பத்திர எண்களை வெளியிட எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பத்திர எண்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு

அரசியல் கட்சிகள் எந்த நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றுள்ளன என்பது தொடர்பான தேர்தல் பத்திர எண்களை வெளியிடுமாறு எஸ்பிஐ-வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மீண்டும் விசாரணை 

இன்று தேர்தல் பத்திரங்கள் தொடர்பான மேல்முறையீடு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை என்ன எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

பின்னர், தேர்தல் பத்திர எண்களை வெளியிடுமாறும் எஸ்பிஐ-வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

தேர்தல் பத்திர விவரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்குமாறு, எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பித்த எஸ்பிஐ வங்கியானது, தேர்தல் பத்திர எண்களை சமர்ப்பிக்கவில்லை என கேள்வி எழுப்பியது.

இதுவரை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்களில் அரசியல் கட்சிகள் பணம் பெற்றது தனியாகவும், நிறுவனங்கள் பணம் அளித்தது தனியாகவும் என    வெளியிடப்பட்டன. இதனால், எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு பணம் வழங்கியுள்ளது என்ற தகவல் தெரியாத நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தேர்தல் பத்திர எண்கள்:

இந்நிலையில், தேர்தல் பத்திர எண்களை வெளியிடக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி எழுப்பியது.

மேலும், நாளை மறுநாளுக்குள் தேர்தல் பத்திர எண்களையும் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையடுத்து எந்த கட்சிகள், எந்த நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றுள்ளது என்ற விவரங்களை தேர்தல் ஆணையத்தின் வழியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், தேர்தல் பத்திரங்கள் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

Also Read: Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள்; தேதிவாரியாக பணம் அளித்தவர்களின் விவரம் வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published at: 15 Mar 2024 10:49 AM (IST)
Tags: SBI Supreme Court Electoral Bonds
  • முகப்பு
  • செய்திகள்
  • இந்தியா
  • Electoral Bonds: தேர்தல் பத்திர எண்களை வெளியிட எஸ்பிஐ-க்கு உத்தரவு; மீண்டும் உச்சநீதிமன்றம் அதிரடி
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.