இமாச்சலில் இருந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர். ஷாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் டெல்லி அழைத்து செல்லப்பட்டார். இந்தநிலையில், தான் நலமுடன் இருப்பதாக ஒரு வீடியோ மூலம் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர். ஷா தகவல் தெரிவித்துள்ளார். 






அந்த வீடியோ பதிவில், ”கடவுளின் அருளால், நான் நன்றாகவும், நிலையாகவும் இருக்கிறேன். கவலைப்பட ஒன்றுமில்லை. நான் டெல்லியை அடைகிறேன், நீங்கள் என்னைப் பார்க்கலாம். நீங்கள் பார்க்கலாம். கடவுளின் அருளால் எனக்கு 'தரிசனம்' கிடைத்தது (சில கோவிலில்) நேற்று (புதன்கிழமை) மற்றும் அதற்கு முந்தைய நாள், எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அனைத்து ஆசீர்வாதங்களுடனும் நான் செல்கிறேன். கடவுள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக, என்னையும் ஆசீர்வதிப்பாராக” என்று தெரிவித்திருந்தார்.


முன்னதாக நீதிபதிக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, அதிகாரிகள் உள்துறை அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து அவரை சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லிக்கு அழைத்து வந்தனர்.


நீதிபதி ஷா பாட்னா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாகவும், குஜராத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். கடந்த நவம்பர் 2, 2018 ம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், வருகிற மே 15, 2023 ம் தேதியன்று ஓய்வு பெற இருக்கிறார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண