பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Continues below advertisement

தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையில் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி சந்திரசூட், மனோஜ் மிஸ்ரா, பேலா திரிவேதி, காவாய், விக்ரம் நாத், பங்கஜ் மிட்டல், சதீஷ் சந்திர சர்மா அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வில் பேலா திரிவேதி மட்டும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தார். 

Continues below advertisement

தமிழ்நாட்டில் பட்டியலினத்தவரில் அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கி கருணாநிதி ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. 2009ஆம் ஆண்டு துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் உள் ஒதுக்கீடு மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 

இந்நிலையில் பட்டியலினத்தவரின் உட்பிரிவுகளில் எதுவும் அப்பட்டியலில் இருந்து விலக்கப்படாத நிலையில் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. உள் ஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் 14வது பிரிவை மீறவில்லை எனவும் 7 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.