இந்தியா முழுவதும் கோடை காலம் பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கியது. அம்மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பொதுவாகவே ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், இதன் எதிரொலியாக தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  இது குறித்து அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய தொழிலாளர் நலத்துறை கடிதம் எழுதியுள்ளது.