இந்தியாவில் நேற்று 9,111 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 7,633 ஆக கொரோனா பாதிப்பு குறைந்தது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 60,313 லிருந்து 61,233 ஆக அதிகரித்துள்ளது. 


இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 5,31,141 லிருந்து 5,31,152 ஆக உயர்ந்தது. 


நாடுமுழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,27, 226 லிருந்து 4,48,34,859 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 6,313 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த நிலையில் இன்று 6,702 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 


கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய அமைச்சகம் தரவுகளை வெளியிட்டது. அதில், இந்தியாவில் 7,633 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் இந்தியாவில் தற்போது கொரோனா பாதித்தவர்களில் எண்ணிக்கை 61, 233 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 


அதேபோல், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் 11 பேர் உயிரிழந்தனர். டெல்லி மற்றும் கேரளாவில் தலா 4 உயிரிழப்புகளும், ஹரியானா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று பதிவாகியுள்ளது. 


ஒட்டுமொத்தமாக பாதிப்பு நிலவரம்:


இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 4.47 கோடியாக (4,48,34,859) பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,42,42,474 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.18 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


மத்திய அமைச்சகத்தின் தகவலில்படி, நாடுமுழுவதும் இதுவரை 220.66 கோடி பேர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தியுள்ளனர்.