டெல்லி : கடந்த 7ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை, மாநிலங்களவைகளில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. பல்வேறு காரசாரமான விவதங்களும் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல் கூட்டத் தொடர் தொடங்கியது. நாட்டில் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்ற விவாதம் பேசப்பட்டது. அப்போது, மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு நலன் துறை மற்றும் மத்திய குற்ற ஆவண காப்பகம் பதில் அளித்துள்ளது.
1.64 லட்சம் பேர் தற்கொலை
அதில் கூறியிருப்பதாவது, ”நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்களில் மற்றும யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021ஆம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்டதன் மனச்சுமை காரணமாக உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரவர் குடும்ப பிரச்சனை, பணப் பிரச்சனை போன்ற தனிப்பட்ட காரணத்திற்காகவே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி தற்போது ஏராளமான 25 வயதுகுட்பட்ட இளைஞர்களில் தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பணிச்சுமை போன்றவற்றை இல்லாமல் அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தமிழகம் இரண்டாவது இடம்
2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 18,295 தற்கொலைகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இருக்கும் 36 மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு முன் முதலிடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. அங்கு 22,207 தற்கொலைகள் பதிவாகி இருக்கிறது.
இந்திய அளவில் பதிவான தற்கொலைகளில் 11.5 சதவீதம் தற்கொலைகள் தமிழ்நாட்டில் தான் இருந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பதிவான தற்கொலைகளில் 8,073 குடும்ப பிரச்சனைகளினால் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. குடும்ப பிரச்சனைகளால் தற்கொலை செய்வேரில் தமிழ்நாடு மக்களே அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உடல்சார்ந்த பிரச்சனைகளால் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையில் தமிழகம் தான் முதலிட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், நாடு முழுவதும் தற்கொலை செய்வோரில் தினக்கூலிகள் 25.6 சதவீதம் பேரும் (42,004), அலுவல் பணிக்கு செல்லா குடும்பத் தலைவிகள் 14.1 சதவீதம் பேரும் (23,176), சுய தொழில் செய்வோரில் 12.3 சதவீதம் பேரும் (20,231), வேலைகக்கு செல்வோரும் 8.4 சதவீதம் பேரும் (15,870), 8 சதவீத மாணவர்களும் தற்கொலைக்கு முயல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் படிக்க
Manipur: மணிப்பூர்: அர்ஜெண்டினா வெற்றியை கொண்டாடிய போது ஏற்பட்ட துயரம்.. சுட்டுக் கொல்லப்பட்ட பெண்..
பரந்தூர் விமான நிலையத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: இன்று அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை...!