ட்விட்டர் தளத்தில் ஆனந்த் மஹிந்திரா அவ்வப்போது சில நல்ல வீடியோக்களை பகிர்ந்து தன்னுடைய கருத்தை பதிவு செய்வார். அந்த வீடியோக்கள் பலரையும் அதிகம் கவரும். அந்தவகையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் செய்யும் வேலை பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
அதன்படி அவர் பதிவிட்டுள்ள வீடியோவில்,”சிறுவன் ஒருவன் கயிறு கொண்ட ஒரு லிவரை வைத்துள்ளார். அந்த கயிற்றின் நுணியில் சப்பாத்தி மாவு போன்ற ஒன்றை கட்டி விடுகிறார். அதன்பின்னர் அந்த கயிற்றை தண்ணீரில் தூக்கி வீசுகிறார். அந்த கயிற்றில் மீன்கள் மாட்டும் வரை சிறுவன் காத்திருக்கிறார். கடைசியில் மீன்கள் அதில் மாட்டிய பிறகு அந்த லிவரை இழுத்து கயிற்றிலிருந்து மீனை எடுக்கிறார்” இவ்வாறு காட்சிகள் அமைந்துள்ளன.
இந்த வீடியோவை பதிவிட்டு அவர் ஆனந்த் மஹிந்திரா, “இந்த வீடியோ என்னுக்கு கிடைத்தது. சவாலான உலகிற்கு நடுவே இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இந்த வீடியோவின் கதை நமக்கு உணர்த்துவது ஒன்று தான். கடின உழைப்பு புத்திசாலித்தனம் மற்றும் பொறுமை ஆகிய மூன்றும் நமக்கு வெற்றியை தேடி தரும் என்பது தான் அது ” எனப் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோ சுமார் 1.2 மில்லியன் பேருக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ பலருக்கும் ஒரு துண்டுகோளாக அமையும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ ஒரு சிறிய வாழ்க்கை பாடத்தை நமக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்