கல்லீரல் உடலில் இரண்டாவது பெரிய உறுப்பு ஆகும், இது உடலில் இருக்கும் உறுப்புகள் செயல்பட வழிவகுக்கும்.  நாள்பட்ட கல்லீரல் நோயால் (chronic liver disease) ஏற்படும் பாதிப்புகளால் இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கல்லீரல் நோய்களுக்கு மிகவும் பொதுவான காரணம் மது அருந்துதல் ஆகும். கொழுப்பு இல்லாத கல்லீரல்  (non fatty liver) நோய்களும் நாட்டில் அதிகரித்து வருகின்றன என கூறப்பட்டுள்ளது.


மன அழுத்தம் மற்றும் இன்றைய வாழ்க்கை முறையால் கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்பட முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. இந்த கல்லீரல் நோயை பெரும்பாலானோர் புறக்கணித்து வருகின்றனர். இதற்கு சரியான நேரத்தில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் liver cirrosis  ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். உடலில் ஒரு முக்கிய உறுப்பாக இருப்பதால், கல்லீரல் பித்தத்தை உற்பத்தி செய்யும் ஒரு செரிமான உறுப்பு ஆகும். பித்தமானது உடலின் கொழுப்புகளை உடைக்க உதவுகிறது மேலும் இரத்தத்தில் உள்ள அனைத்து நச்சுகளையும் நீக்கி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கி ஆரோக்கியமான உடல் ஓட்டத்தை பராமரிக்கிறது.


கல்லீரல் நோய் இருந்தால் கண்களில் உள்ள வெள்ளை பகுதியில் மஞ்சள் நிறம் தென்படும். நீரிழிவு மற்றும் உடலில் அதிக லிப்பிட்ஸ் இருப்பது கல்லீரல் நோய் ஏற்பட ஒரு முக்கியமாக காரணமாகும். உடல் பருமன் அல்லது வயிற்றுப் பருமன் பெரும்பாலும் கல்லீரல் நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது. அதேபோல் அக்குள் மற்றும் கழுத்தில் உள்ள மடிப்புகளின் கருமை நிறமாற்றம் இன்சுலின் எதிர்ப்பின் அடையாளமாகும். இன்சுலின் எதிர்ப்பின் அதிகரிப்பு காரணமாக, இன்சுலின் அதிகமாகக் குவிந்து, அகாந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் (acanthosis nigricans) எனப்படும் நிலை ஏற்படுகிறது. இதனால் கழுத்து மற்றும் அக்குளின் மடிப்புகளில் தோல் மடிந்து கருமையாகிவிடும். கொழுப்பு கல்லீரல் நோய் இருக்கும்போது தோல் அரிப்புகள் ஏற்படும். உடலில் அதிகப்படியான பித்த உப்புகள் இருப்பதால் முகத்தில் அரிப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


மேம்பட்ட கல்லீரல் நோய் மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும், இதன் விளைவாக தோல் மஞ்சளாக காட்சியளிக்கும், அதேபோல்  கண்களின் வெள்ளை பகுதி மற்றும் நகங்கள் மஞ்சள் நிறமாக மாறும். மஞ்சள் காமாலையின் முதல் அறிகுறிகள் பொதுவாக கண்களிலும் முகத்திலும் காணப்படும். பில்ரூபின், ஒரு மஞ்சள்-ஆரஞ்சு சுரப்பி ஆகும், அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு, அது இரத்த ஓட்டத்தில் பரவத் தொடங்கி, தோலின் அடியில் உள்ள கொழுப்பு அடுக்கில் கரைக்கப்படும்போது இது நிகழ்கிறது. மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அதற்கான சிகிச்சை பெற வேண்டும் என கூறுகின்றனர்.